Halloween party ideas 2015
.

கடந்த ஞாயிறு(20/032016) அன்று நடந்த ஒரு கருத்தரங்கில் பேசிய கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் "இந்துத் தமிழீழம்" அமைய இந்தியா ஆதரவு தர வேண்டும் என்று பேசியிருக்கிறார்.தற்போது பா.ச.க. ஆட்சியில் உள்ளது என்பதற்காக "இந்து தமிழீழம்" என்று கோரிக்கை வைத்தால் அது ஈழத்தை பெற்றுத்தந்து விடுமா? இவர் தொடர்ச்சியாக ஈழம் அமைய இந்தியா ஆதரவு தர வேண்டும் எனும் கருத்தை முன்வைத்து பேசி வருகிறார்.

1)2009ம் ஆண்டு நடைபெற்ற தமிழினப் படுகொலையில் முக்கிய குற்றவாளியான இந்திய அரசு ஈழத்தை பெற்றுத் தருமா?

2)ஐ.நா சபையில் இலங்கை அரசு மீதான அனைத்து போர்குற்ற விசாரணைகளுக்கும் தடையாக இந்தியா அரசே இருக்கிறது இந்த அரசா ஈழம் பெற்றுத் தரும்.

3)சீன சார்பு மகிந்த இராஜபட்சே அரசாங்கத்தை இலங்கையில் வீழ்த்தி விட்டு தற்போது அமெரிக்க-இந்திய ஆதரவு சிறீசேனா அரசாங்கம் அமைந்திருக்கும் சூழலில் அதன் மூலமே தனது பொருளாதார-வர்த்தக நலன்களை இலங்கையில் மேற்கொள்கிறது.அப்படி இருக்க அது ஈழம் பெற்றுத் தருமா?

4)முன்பு இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் கூட போராளி இயக்கங்களுக்கு உதவி செய்தது கூட இலங்கை அரசை பணிய வைக்கத்தானே தவிர ஈழம் அமைவதற்கல்ல.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு அதே இந்திய அரசு போராளிகளிடமிருந்து ஆயுதங்களை களைந்தது.

முதலில் "தமிழீழம்" அமைய இந்தியா உதவ வேண்டும் என்று கூறி வந்தவர் தற்போது "இந்துத் தமிழீழம்" என்று முழங்குகிறார்.ஏற்கனவே இசுலாமியர் உடனான முரண்பாடு உள்ள நிலையில் வடக்கு-கிழக்கு பிராந்திய வேறுபாடு நீடிக்கும் நிலையில் "இந்துத் தமிழீழம்" எனும் முழக்கமும் ஈழத்தமிழர்களிடையே பிளவை தான் ஏற்படுத்தும்.

Post a Comment

Powered by Blogger.