Halloween party ideas 2015
.


"ஏழுதமிழர் விடுதலை - உச்சநீதிமன்ற மறுப்பு - தமிழ்நாடு அரசு அதிகாரம்"
திருச்சியில் நூல் அறிமுக விழா!
மார்ச்சு 5 - காரிக்கிழமை (சனிக்கிழமை ) அன்று நடக்கிறது! 

தமிழீழத்திற்கு இந்திய அமைதிப்படையை அனுப்பிஆயிரக்கணக்கானத் தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமான முன்னாள் இந்தியப் பிரதமர் இராசீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புபடுத்தப்பட்ட பேரறிவாளன்முருகன்சாந்தன், நளினி உள்ளிட்ட ஏழு தமிழர்களின் விடுதலை குறித்தும்அதற்கு மறுப்புத் தெரிவித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்தும்,தமிழ்நாடு அரசின் அதிகாரங்கள் குறித்தும் சட்ட விளக்கங்களோடு பேசுகின்ற, "ஏழு தமிழர் விடுதலை - உச்ச நீதிமன்ற மறுப்பு - தமிழ்நாடு அரசு அதிகாரம்" - நூலின் அறிமுக  விழா வருகின்ற மார்ச்சு 5 - காரிக்கிழமை அன்று திருச்சியில் நடைபெறுகின்றது. 

 

மார்ச்சு 5- காரிக்கிழமை (சனிக்கிழமை) மாலை 5.30 மணியளவில்திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள இரவி சிற்றரங்கில் (இரவி மினி ஹால்) நடைபெறும், இந்நூல் அறிமுக விழாவுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் மூ.த. கவித்துவன் தலைமை  ஏற்கிறார். 

 

பேரறிவாளன் தாயார் திருவாட்டி அற்புதம் அம்மையார் நூலினை வெளியிட தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் ம.ப. சின்னதுரை, திரு.செல்லையா, திரு.அ .மனுவேல் உள்ளிட்ட சான்றோர் பெருமக்கள் நூற்படி பெறுகின்றனர்.

 

மூத்த வழக்கறிஞர் திரு. ப.பா. மோகன்  நூலைத் திறனாய்வு செய்து சிறப்புரையாற்றுகிறார். நிறைவில்நூல் ஆசிரியரும் தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளருமான தோழர் கி. வெங்கட்ராமன் ஏற்புரை நிகழ்த்துகிறார். தோழர் வே.க.இலட்சுமணன்  நன்றி நவில்கிறார். 

 

இந்நிகழ்வில்தமிழின உணர்வாளர்களும்பொது மக்களும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்! 


===================================== 

தலைமைச் செயலகம், 

தமிழ்த் தேசியப் பேரியக்கம் 



Post a Comment

Powered by Blogger.