Halloween party ideas 2015
.

தமிழர்களின் நிலங்கள் முழுவதும் விடுவிக்கப்பட்டன : இந்திய பாரதிய ஜனதாக் கட்சியின் தேசிய செயலர் எச்.ராஜாவின் கருத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மறுப்பு ! 

இந்திய பாராதிய ஜனதாக்கட்சி ஆட்சியின் காரணமாக, இலங்கையில் அபகரிக்கப்பட்டிருந்த தமிழ்மக்களின் காணிகள் யாவும் விடுக்கப்பட்டு விட்டதென அக்கட்சியின் தேசிய செயலர் எச்.ராஜாவின் கருத்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பொதுமக்களின் காணிகள் இன்னமும் அபகரிக்கப்பட்டும், பல்வேறு தேவைகளின் பெயரில் தொடர்ந்தும் அபகரிக்கப்பட்டும் வரும் நிலையில், தமிழ்மக்களின் காணிகள் முழுவதும் விடுவிக்கப்பட்டு விட்டதான கருத்து தவறாதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.

எச்.ராஜா அவர்கள் தமிழக ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றில் தெரிவித்திருந்த கருத்துக்கு அந்த ஊடகத்துக்கு பதிலுரைக்கும் பொழுதே அமைச்சர் சுதன்ராஜ் இந்த மறுப்பினைத் தெரிவித்துள்ளார்.

ஒப்பீட்டளவில் சில நூறு ஏக்கர் காணிகளை விடுவித்து அதனை ஓர் பிரச்சரமாக சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றதென சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் சுதன்ராஜ் அவர்கள், இன்னமும் பல்லாயிரக்கண்கான ஏக்கர் பொதுமக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ள நிலை தொடர்வதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழர்களது பிரச்சனைகள் தீர்க்கபட்டு விட்டன என்ற கருத்தும் தவறானது என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் சுதன்ராஜ், தமிழர்களின் உரிமைக்கான பேராட்டம் மட்டுமல்ல நீதிக்கான போராட்டமும் தொடர்ந்து வருகின்றது. இராணுவ பிரச்சன்னம் தொடர்ந்து பொதுமக்களிடையே இடையே இருக்கும் நிலையில், பொதுமக்கள் எப்படி இயல்பாக வாழ முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாதம் ஊடகசேவை






Post a Comment

Powered by Blogger.