Halloween party ideas 2015
.

நரிக்குறவப் பெண் என்றதும் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது? வெற்றிலை மெல்லும் வாய், கழுத்து நிறைய பாசிமணிகள், கை நிறைய வளையல்கள், அழுக்கான உடலில் அரைப்பாவாடை, இடுப்பில் ஒரு கைக்குழந்தை... என நம் மனதில் தோன்றும் சித்திரத்தை அடியோடு மாற்றிப்போடுகிறார் ஸ்வேதா.  நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் மாடர்ன் பெண்ணான ஸ்வேதா, தமிழ்நாட்டின் நரிக்குறவர் இனத்தின் முதல் பொறியியல் பட்டதாரி. ஆனால், இது மட்டும் அல்ல அவரது பெருமை. பொறியியல் படித்து கேம்பஸ் இன்டர்வியூவில் கை நிறையச் சம்பளத்துடன் கிடைத்த வேலையை, தன் சமூக மக்களின் நலனுக்கு உழைப்பதற்காக உதறித் தள்ளியிருக்கிறார். தன் சமுக மக்கள் முன்னேற்றத்திற்காக அரசு உதவியுடன் உண்டு உறைவிடப் பள்ளியை நடத்தி வருகிறார்.வாழ்த்துக்கள் ஸ்வேதா.

Post a Comment

Powered by Blogger.