Halloween party ideas 2015
.

முத்துக்குமாரும் சசிகலாவும் காதலர்கள். இருவரும் சிவகங்கை பகுதியைச் சேர்ந்தவர்கள்.இவர்களது காதலுக்கு சசிகலா வீட்டில் கடும் எதிர்ப்பு. ஆகையால், காதலர்கள் இருவரும் கிராமத்தைவிட்டு வெளியேறினர். ஒருவாரம் கடந்து,அவர்களதுஇருப்பிடத்தைக் கண்டுபிடித்தசசிகலாவின் குடும்பத்தினர்,உங்கள் இருவருக்கும் திருமணம்செய்துவைக்கிறோம்என்று கூறினர்.அதைநம்பி, அவர்களோடு தங்களது கிராமத்துக்குவந்த இருவரும், நான்குபேர் கொண்ட கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்டனர். முத்துக்குமார் சம்பவ இடத்தில்இறந்துபோனார். சசிகலா வெட்டுக்காயங்களுடன் தப்பித்துச்சென்று முட்புதரில் கிடந்தார். ஆபத்தானநிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சசிகலா, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். முத்துக்குமாரை கொலைசெய்தது சசிகலாவின் அப்பாவும் அண்ணன்களும்.
சம்பவம் நடந்த அந்தப் பகுதிக்குஅ சென்றிருந்தோம். ‘கொலை என்பதுகுற்றம்தான். ஆனால் நியாயத்துக்காக கொலை செய்யப்படுவதில் தவறுஎதுவும் இல்லை’ என்றார் ஒருவர். சசிகலாவின் குடும்பத்தினர்‘எங்கள் கிராமத்துப் பெருமையை காப்பாற்றி இருக்கின்றனர். சாதியை பகைத்துக்கொண்டு இன்னொரு ஆணோடு எப்படிப் போகலாம்? அந்தப் பெண்ணையும் முடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பரவாயில்லை, அந்தப் பையனின் ரத்தத்தினால் எங்கள் ஊர் சுத்தமாகிவிட்டது’ என்றனர். ஒரு இளைஞர், ‘காதலுக்கு நாங்கள் எதிரிஇல்லை. ஆனால் யாரைக் காதலிக்க வேண்டும் என்பதில்ஒரு வரைமுறை இருக்கவேண்டும். அற்ப காதலுக்காக உயிரைவிட, மேலான சாதியை எப்படி இழக்கமுடியும்?’என்று ஆதங்கப்பட்டார்.
மதமும்சாதியும் பொருளாதாரமும் போன்ற பல காரணங்களால் கௌரவக் கொலைகள் நடந்தாலும், தமிழகத்தில்அதிகமான கௌரவக் கொலைகள் சாதியின் அடிப்படையில் நடத்தப்படுகின்றன.குறிப்பாக, தலித் ஆண்களை காதலிக்கும் அல்லது திருமணம்செய்துகொள்ளும் தங்கள் வீட்டுப் பெண்களை கொஞ்சம்கூட ஈவு, இரக்கம் இல்லாமல் கொலை செய்கின்றனர். பிரியா என்ற பெண், தலித்இளைஞர் காளியை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். ‘இந்தத் திருமணத்தால் நமதுகுடும்ப கௌரவம் கெட்டுப்போய்விட்டது. தயவுசெய்து, காளியை விட்டு வந்துவிடு’என்றுபிரியாவிடம் கெஞ்சி அழுதிருக்கிறார் அவரது தந்தை சீனிவாசன். அதற்குபிரியா மறுக்க,ஆத்திரத்தில்தம் மகளை கொலைசெய்தார் சீனிவாசன்.
சீனிவாசன், தன் மகள் பிரியாமீது அதிகமான பாசத்தோடு இருந்தவர்.ஏன், பிரியா மட்டுமே உலகம் என்று நம்பியவர்.இந்த அழகான பாசத்தை சாதி எப்படி உடைத்திருக்கிறது? ‘உங்கள் மகளைவிட சாதி பெரிதா?’ என்று கேட்டேன். ‘ஆம், சாமியைவிட சாதி பெரிது’ என்றார் சீனிவாசன்.சாதி, சாமிகளை உருவாக்கியிருக்கிறது. தமிழகத்தில்பல கன்னிதெய்வங்கள் கௌரவக் கொலையால் படுகொலை செய்யப்பட்டவர்கள் என்றுஆய்வுகள் தெரிவிக்கின்றன. தங்கள் வீட்டுப் பெண்களை, சாதிக்காக கொலை செய்துவிட்டு அவர்களை தெய்வமாக மாற்றியிருக்கின்றனர்.
தமிழகத்தில்,கௌரவக் கொலையால் படுகொலை செய்யப்படுபவர்களில் 80 சதவிகிதத்தினர்பெண்கள். குடும்பத்தினர்கள்மட்டுமல்ல; உறவினர்களாலும் சாதிக் குழுக்களாலும் இந்தப் பெண்கள் கொலை செய்யப்படுகின்றனர். அதுவும்சமீபகாலமாக, தமிழகத்தில்சாதி அமைப்புகள் பல்வேறு வடிவங்களில்மக்களின்உணர்வுகளைத் தூண்டுகின்றன.குறிப்பாக, தலித் இளைஞர்களைக் காதலித்தாலோ, திருமணம் செய்துகொண்டாலோ தம் சாதித்தூய்மை கெட்டுப்போய்விடும் என்று,குடும்பங்களுக்கு இந்த அமைப்புகள் அழுத்தம்கொடுக்கின்றன. அந்த அழுத்தத்தைத் தாங்காமலும், உறவுகளில்இருந்துதனிமைப்பட்டுப் போய்விடுவோமோ!என்கிற அச்சத்தில், தங்களது பிள்ளைகளை இழக்கத் துணிகிறார்கள் பல பெற்றோர்கள். குழந்தைகள்மீது அதீத பாசம் வைப்பவர்கள் தங்களை மாய்த்துக் கொள்கிறார்கள்.
தமிழகத்தில்,ஆண்டுக்கு சராசரியாக 1000 பெண்கள் கொலை செய்யப்படுகின்றனர். இதில்17 சதவிகிதம்காதல் விவகாரமான கொலைகள். அதேபோன்று, 7000 பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இவற்றில்28 சதவிகிதம்காதல் விவகாரமான தற்கொலைகள். இவையெல்லாம் கௌரவக் கொலைகளாகவோ, கௌரவ தற்கொலைகளாகவோ பார்க்கப்படுவது கிடையாது. இதுமட்டுமல்லாமல், இந்தச் சாதி கௌரவத்தால் வாழ்க்கையைத் தொலைத்தவர்களும் அதிகம்.
அண்மையில், ரஞ்சித்குமார் என்ற 22 வயதுதலித்இளைஞர், பிறந்து22 நாளே ஆன ஆண் குழந்தையோடு எங்களைத் தேடிவந்தார். மிகவும்பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தஒருபெண்ணை காதலித்து திருமணம்செய்தவர். தம் மனைவி நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தசமயத்தில் மனைவியின் குடும்பத்தினர்தந்திரமாகப் பேசி,பிரசவத்துக்குஅழைத்துச் செல்கிறோம் என்றுகூறி அழைத்துச் சென்றனர். பிறந்த குழந்தையை அவர்கள் சென்னையில் விற்பனை செய்ய, அந்தத் தகவல் தெரிந்த ரஞ்சித்குமார் போலீஸ் துணையுடன் தம்முடைய குழந்தையை மீட்டுவந்தார். ஆனால் அவரதுமனைவி, கணவரோடு வாழப் பிடிக்கவில்லை என்று கூறிவிட்டார்.
கௌரவக் கொலைகள் ஒழிப்புக்கென்று தனிச்சட்டம்இதுவரை இயற்றப்படவில்லை. கடந்த 2011ம் ஆண்டு தேசிய சட்ட ஆணையம் கௌரவக் கொலைகள் தடுப்புக்கென்று வரைவு ஒன்றை மத்தியஅரசுக்குசமர்ப்பித்தும் அவை கிடப்பில்கிடக்கிறது.கடந்த வருடம், உச்சநீதிமன்றம்கௌரவக் கொலைகள் குறித்தநிலை அறிக்கையை மாநில அரசாங்கத்திடம் கேட்டிருந்தது. இந்தியாவில் உள்ள 22 மாநிலங்கள், தங்களது மாநிலத்தில் கௌரவக் கொலைகள் நடக்கின்றனஎன்று ஒப்புக்கொண்டுள்ளன. ஆனால், தமிழகஅரசு எந்த அறிக்கையையும் உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பவில்லை.
கௌரவக் கொலைகளில் ஈடுபடுபவர்கள் இரண்டுதந்திரங்களைச் செய்கின்றனர். கொலை செய்துவிட்டு சடலத்தை எரித்துவிடுகின்றனர். போலீஸ் விசாரணையில், ‘தங்கள் மகள் தற்கொலை செய்துகொண்டாள். எங்கள் சாதி வழக்கப்படி எரித்துவிட்டோம்’ என்றுகூறிவிடுகின்றனர். சடலத்தை எரித்ததனால் பிணக்கூராய்வு செய்ய வழியில்லை. ஆகவே,சந்தேகமரணம் அல்லதுதகவல் தெரிவிக்காமல் சடலத்தை எரித்ததாக வழக்குஎன்ற அடிப்படையில் மட்டுமே பதிவுசெய்யப்படுகின்றன. உசிலம்பட்டியில்தலித்இளைஞர் திலீப்குமாரை காதலித்ததற்காக விமலாதேவி கொல்லப்பட்டார். ஆனால், தற்கொலை என்று வழக்குபதிவுசெய்யப்பட்டது. விமலாதேவியின் சடலம் எரிக்கப்பட்டதால் உண்மையை கண்டறிய முடியவில்லை. தற்போது, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
அடுத்து,வீட்டில் உள்ள தந்தையும், சகோதரர்களும் ஒருபெண்ணை கொலை செய்துவிட்டு, தந்தை புகார்தாரராகவும் சகோதரர்கள் குற்றவாளிகளாகவும் வழக்கு பதிவுசெய்யப்படும். சில மாதங்களில் தந்தை பிறழ்சாட்சியாக மாறுவார். குற்றவாளிகள் விடுவிக்கப்படுவார்கள். ஆக, இதுபோன்ற கௌரவக் கொலைகளுக்கு எதிராக வழக்கை நடத்துவதும்சிரமம். பெண்வீட்டார் பையனை கொலை செய்துவிட்டால், அந்த வழக்கை அவரதுகுடும்பத்தினர் நடத்துவார்கள். ஆனால், தங்கள் வீட்டுப் பெண்களை கொலைசெய்த வழக்கில் எதிர்தரப்பு என்பதுஇல்லாமல் இருப்பதனால் விசாரணை அதிகாரிகள் விலைக்கு வாங்கப்படுகின்றனர்.
பையன் தலித்தாக இருந்து கொல்லப்பட்டால், அந்தச் சம்பவத்துக்குஎதிராக தலித் இயக்கங்கள் குரல் கொடுக்கின்றனர். அதேநேரத்தில், தலித்இளைஞனுக்காக கொல்லப்படுகிற பெண்ணுக்கு நீதிகேட்டு பெரியளவில் போராட்டங்கள் எடுத்துச் செல்லப்படுவதில்லை. சாதியத்துக்காகத்தான் அந்தப் பெண் கொலை செய்யப்பட்டிருப்பார். ஆனால், கொலைசெய்தவரும் இறந்தவரும் ஒரேசாதியாக இருப்பதனால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும்வழக்குபதிவுசெய்ய முடியாது. ஒருவிதத்தில், ஒருசில சம்பவங்களைத் தவிர பெரும்பாலான சம்பவங்களில் நீதிக்கான போராட்டம் இன்றி மடிந்துபோகின்றனர் அந்தக் கன்னி தெய்வங்கள்.
சாதியைவிட மனிதம்பெரிது, தனி மனிதசுதந்திரம்பெரிது என்பதை எப்போது நாம் உணரப் போகிறோம்? இளவரசன் உடல் சிதைந்துபோய் பிணவறையில் கிடக்கிற தருவாயில் அவரதுதந்தை, என் மகன் இளவரசனை திருமணம்செய்த திவ்யா என் மருமகளல்ல;என் மகள். திவ்யாவுக்கு மறுமணம் செய்துவைக்கத் தயாராக இருக்கிறோம் என்றுகூறினார். மகன் இறந்துகிடந்ததறுவாயிலும் ஒரு பெண், நன்றாக இருக்கவேண்டும் என்ற அந்த மனதின்நியாயங்களை நாம் புரிந்திருக்கிறோமா?
@kathir

Post a Comment

Powered by Blogger.