Halloween party ideas 2015
.

தமிழ்நாடு கள் இயக்கம்

செ. நல்லசாமி   
கள ஒருங்கிணைப்பாளர்
அரச்சலூர் – 638 101.                            
ஈரோடு மாவட்டம்                                  9894099955                              
                  
15.03.2016
பெறுநர்
உயர்திரு. ராஜேஸ் லக்கானி அவர்கள்,
தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையாளர்,
தலைமைச் செயலகம், சென்னை – 600 009.
ஐயா,
    பொருள்: அரசியல் அமைப்புச் சட்டம் மக்களுக்குக் கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை என்ற
            அடிப்படையில் தமிழ்நாட்டில் ஏப்ரல் 15முதல் கள் இறக்குவது தொடர்பாக-
    கள் போதைப்பொருளோ மதுவோ அல்ல. அது உணவின் ஒரு பகுதி. உலகளவில் தமிழ்நாட்டைத் தவிர எங்கும் கள் இறக்கவோ பருகவோ தடை இல்லை. இந்தத்தடை உலகளாவிய நடைமுறைக்கு எதிரானது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்குப் (யுசவiஉடந 47) புறம்பானது. தமிழ்நாட்டில் மட்டும் தடை இருப்பது அரசின் கொள்கை முடிவாகாது. அது அரசின் ஆளுமை இன்மையின் வெளிப்பாடே ஆகும். இது கைலாகாத்தனமும் ஆகும்.
    தமிழ்நாட்டில் வரும் மே 16ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடைமுறை விதி அமலுக்கு வந்துள்ளது. அரசியல் அமைப்புச் சட்டம் மக்களுக்குக் கொடுத்திருக்கும் உணவுதேடும் உரிமை என்ற அடிப்படையில் வரும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் தமிழ்நாடு அளவில் கள் இறக்குவதை தீவிரப்படுத்துவது எனக் கள் இயக்கம் முடிவு செய்துள்ளது. இக்கால முறையில் இறக்கப்பட்ட கள்ளையும் இதிலிருந்து தயாரிக்கப்படும் சர்க்கரையையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதெனவும் தீர்மானிப்பட்டுள்ளது.
“அரசியல் அமைப்புச் சட்டப்படி கள்ளும் ஒரு தடைசெய்யப்பட வேண்டிய பண்டம் தான்” என்ற நிலைப்பாட்டைத் தேர்தல் ஆணையம் கொண்டிருந்தால், கள் இயக்கத்துடன் வாதிட்டு நல்வழிப்படுத்திட அழைக்கின்றோம். தேர்தல் ஆணையத்திடமிருந்து கிடைக்கும் பதிலின் அடிப்படையில் வரும் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதிக்குள் வாதவிவாதத்திற்கான அரங்கத்தை கள் இயக்கம் சென்னையில் ஏற்பாடு செய்யும். சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்புக் கருதி பத்திரிகை ஊடகங்கள் மட்டுமே பார்வையாளர்களாக இருப்பர். கள்ளும் ஒரு போதைப் பொருள் தான், அதுவும் தடைசெய்யப்பட்ட ஒரு பண்டம் தான் என்பதைத்  தேர்தல் ஆணையத்தரப்பு நிரூபித்து விட்டால் தமிழ்நாடு கள் இயக்கம் கலைக்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை தேர்தல் ஆணையம் பயன்படுத்திக் கொண்டு இயக்கத்தை நல்வழிப்படுத்தி;ட வாதிட முன்வர வேண்டும். இதற்கான பதிலை மேலான தாங்களிடமிருந்து வரும் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதிக்குள் கள் இயக்கம் எதிர்பார்க்கிறது.
செய்தக்க அல்லசெயக் கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்    - குறள்
தங்கள் உண்மையுள்ள,

செ. நல்லசாமி
நகல்: உயர்திரு. தலைமைத் தேர்தல் ஆணையாளர்,
     இந்திய தலைமைத் தேர்தல் ஆணையகம், புது டில்லி.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு
(குநுனுநுசுயுவுஐழுN ழுகு வுயுஆஐடுNயுனுரு யுபுசுஐஊருடுவுருசுநுளு யுளுளுழுஊஐயுவுஐழுNளு)
செ. நல்லசாமி
செயலாளர்
அரச்சலூர் – 638 101.                              0424-2357090
ஈரோடு மாவட்டம்                                       9894099955
               
15.03.2016
பத்திரிகைசெய்தி
தாவர எண்ணெய் இறக்குமதி 25மூ அதிகரிப்பு – தடுமாறும் தென்னை விவசாயம்:
    தாவர எண்ணெய் இறக்குமதியில் உலகிலேயே இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்திய நாட்டின் ஓராண்டு மொத்த சமையல் எண்ணெய் நுகர்வு 1.9 கோடி டன்களாகும். இதில் இந்தியாவிற்குள் இறக்குமதி ஆவது 1.44 கோடி டன்கள். இறக்குமதியில் பாமாயில் மட்டும் 80 சதவிகிதமாக இருந்துத் தேவையைப் பூர்த்தி செய்கிறது. மத்திய மாநில அரசுகளின் மொத்தப் பட்ஜெட்டில் சுமார் 10 சதவிகிதம் அளவிற்கு உணவு மான்யம் கொடுக்கப்படுகிறது. இந்த மான்யத்தின் பெரும்பகுதி இறக்குமதி எண்ணெய்க்கே சென்றுவிடுகிறது. இந்தியாவில் விளையும் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய் போன்றவற்றிற்குப் பெரும்பாலும் கொடுக்கப்படுவதில்லை. மான்யத்தின் பெரும்பகுதி வெளிநாட்டினவருக்கே சென்று விடுகின்றது. 1947க்குப்பிறகும் கூட இந்தியா பன்னாட்டின் காலனியாகத் தொடர்வது வேதனைக்குரியதாக உள்ளது. நாடு பன்னாட்டுச்சந்தையாகிப் போனது. வேளிநாட்டவரின் வேட்டைக்காடாகத் தொடர்கிறது.
    சுத்திகரிக்கப்பட்ட ‘பாம்கார்ன்’ ஆயிலுக்கு இறக்குமதித் தீர்வையாக 20மூ விதிக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்படாத எண்ணெய்க்கு 12மூ ஆக உள்ளது. று.வு.ழு படி ஒரு நாடு தன்னுடைய உள்நாட்டு விவசாயத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்காக இற்க்குமதிப் பண்டங்களுக்கு 300மூ வரை இறக்குமதித் தீர்வை விதித்துக் கொள்ளலாம். இதைப்பின்பற்றி உள்நாட்டு விவசாயத்தைக் காக்க இந்திய அரசு முன்வருவதேயில்;லை. கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் இறக்குமதி அளவு 28மூ வரை அதிகரித்துள்ளது.
    இற்க்குமதி பாமாயில் விலை ரூ. 60ஆக இருப்பதால் இதர இந்திய சமையல் எண்ணெய்களில் இது தாராளமாகக் கலப்படம் செய்யப்படுவது நடைமுறையில் உள்ளது. இதுபோக கிலோ ரூ.30 என்ற விலைக்கு ‘ஒயிட் ஆயில்’ என்று சொல்லக்கூடிய இன்டஸ்ட்ரியல் எண்ணெயையும் சேர்த்துக் கலப்பது வேதனைக்குரியது. திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சுற்றி சுமார் 250 தேங்காய் எண்ணெய் பிழியும் ஆலைகள் உள்ளன. இவற்றில் கலப்படம் செய்யாத ஆலைகளே இல்லை. கலப்பட விகிதாசாரம் மட்டும் வேறுபடுகிறது. ‘டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ்’ என அழைக்கப்படும் நவீன அங்காடிகளில் டின்களிலும்,  பாட்டில்களிலும், பாலிதீன் பைகளிலும் அடைக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் ரூ.140, ரூ.150 என்ற விலையில் விற்கப்படுகிறது. அதே நேரத்தில் தேங்காய்ப் பருப்பைச் சந்தை விலைக்கு வாங்கி எண்ணெய் ஆட்டினால் 1 கிலோ தேங்காய் எண்ணெயின் அடக்க விலை ரூ.170 ஆகின்றது. ஆனால் எப்படி இந்தப் பெரிய நிறுவனங்களால் விலையைக் குறைத்துக் கொடுக்க முடியும்? கலப்படமே இதற்கு அடிப்படைக் காரணம். கலப்படக்காரர்கள் கவனிக்க வேண்டியவர்களைக் கவனிக்கும் விதத்தில் கவனித்து விடுகின்றனர். கடந்த ஆண்டு 1கிலோ தேங்காய் பருப்பு ரூ.110க்கு விற்றத. ஆனால் அது தற்போது ரூ.55ஆகக் குறைந்து போயுள்ளது. கத்தரிக்காயைப்போல தேங்காயையும் கூறுபோட்டு விற்கும் அவல நிலை வந்து விட்டது. கசாப்புக்கடைகளில், “ 1கிலோ கறி வாங்கினால் 1 தேங்காய் இலவசம்” என்ற அறிவிப்பையும் காண முடிகிறது. தேங்காய் விலை வீழ்ச்சியின் விளைவாகக்  கட்டுபடியில்லாத காரணத்தினால் இரவில் தேங்காய் திருடியவர்களும் கூட திருடுவதை நிறுத்தி விட்டார்கள். “ முள்ளிலே இலை பட்டாலும் இலையிலே முள் பட்டாலும் கிழிவது என்னவோ இலைதான்” என்ற அடிப்படையில் இறுதியில் பாதிக்கப்படுவோர்கள் விவசாயிகளே ஆவர். இவர்கள் தூக்கில் தொங்குவது ஒரு தொடர்கதையாகிப் போனது.
    நாடெங்கிலும் திரும்பிய பக்கமெல்லாம் மருந்துக் கடைகளும், மருத்துவமனைகளும் கூடியிருப்பதற்கும், நோய் தாக்குதல் அதிகமாக இருப்பதற்கும் உணவுக் கலப்படமே முதன்மைக் காரணம். விவசாயிகளின் தற்கொலைகளுக்கும் முதன்மைக் காரணமாக இருப்பது இவ்வாறான தவறான இறக்குமதியும், கலப்படமும் தான்.அரசுகளின் ஆளுமை இன்மையே இதற்குக் காரணம். கண்காணித்துக் குற்றவாளிகளைத் தண்டித்து மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. போட்டிப்போட்டுக் கொண்டு இலவசங்களைக் கொடுப்பதும், மக்களின் அறியாமையை அறுவடை செய்வதும் அரசின் ஆளுமை ஆகாது. குடிகளுக்கு ‘இலவசம்’ என்ற திருவோட்டை வழங்குவதே இன்றைய அரசுகளின் சாதனையாக இருப்பது வேதனைக்குரியது. வரும் தேர்தலில் இவற்றையெல்லாம் உணர்ந்து தெளிந்து வாக்காளர்கள் வாக்களித்தால் மட்டுமே இவற்றிற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். அப்போது பொற்காலம் மலரும். ‘சுதந்திரத்தின் விலை மக்களுடைய விழிப்புணர்வு’.
“இதனால் இதனை இவண்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்”  - குறள்

செ. நல்லசாமி

தமிழ்நாடு கள் இயக்கம்
(வுயுஆஐடுNயுனுரு வுழுனுனுலு ஆழுஏநுஆநுNவு)
செ. நல்லசாமி   
கள ஒருங்கிணைப்பாளர்
அரச்சலூர் – 638 101.                            
ஈரோடு மாவட்டம்                                  9894099955                              
பத்திரிகை டிசய்தி                 
15ஃ03ஃ2016

இல்லாத ஊருக்குத் தடம் காட்டத் துழக்கும் கட்சித் தலைவஙகள்
தடுமாற்றத்தில் தமிர்க வாக்காளஙகள்

    இன்றைய தமிர்கத்தின் எரியஜம் பிரச்சனைகளுள் முதல் இடத்தில் இருப்பது சூமதுவிலக்குசூஃ மதுவிலக்கு தெவையா? இல்லையா? என்றால் சூதெவைசூ என்றெ பலரும் வுறுகிறாஙகள்ஃ இது சாத்தியமா? இல்லையா? என்று கெட்டால் அது சாத்தியமில்லை என்பது பலரது வுற்றுஃ 1937ல் ராகூhகூp ப{ரண மதுவிலக்கைக் டிகாண்டு வந்தாஙஃ அப்பொது பிஸ்ரீப்பஜகள் பாதிரியாஙகள் மற்றும்  மதச்சட';கில் ஈடுபடுவொருக்கு மதுவிலக்கிலும் விலக்கு அளிக்கப்பட்டதுஃ முதல்வராக ஓமந்தூங ராமசாமி இருந்த பொது 1948 அக்டொபங 2 ஆம் தெதியிலிருந்து டிசன்னை மாகாணம் முபுமைக்கும் ப{ரண மதுவிலக்கு டிகாண்டு வரப்பட்டதுஃ அது அவருடைய பதவியையெ காவஜ வா';கியதுஃ

    1971ல் கருணாநிதி மதுக்கடைகளைத் திறந்தாஙஃ 1974ல் அவரெ அதை |ழனாஙஃ 1981ல் மறுபழயஜம் எம்ஃகூpஃஆஙஃ மதுக்கடைகளைத் திறந்தாஙஃ 1ஃ1ஃ1987ல் தமிர்; மண்ணின் டிமற்பானமான கள்ளுக்குத் தடை விரிக்கப்பட்டதுஃ சீமைச் சாராய';களுக்குச் சிவப்பஜ கம்பளம் விரிக்கப்பட்டதுஃ 2003 நவம்பங 28 முதல் டிகூயலலிதா முதல்வராக இருந்த பொது சீமைச்சாராய சில்லரை விற்பனையில் சூடாழூ;மாக்சூ |லம் அரசு கால்பதித்ததுஃ இதனுக்கு அரசுக்கு வரும் வருவாய் வுழயதுஃ

    2016 தெஙதலை முன்னிட்டு பல கட்சிகள் சூப{ரண மதுவிலக்குசூ என்ற பஜதிய ஆயஜதத்தை எடுத்துத் தெஙதல் களத்தில் டிவற்றி டிபறத் துழப்பதைக் காண முழகிறதுஃ ஆட்சிப்டிபாறுப்பஜ ஏற்றதும் பொடும் முதல் கைடியபுத்து மதுவிலக்கிற்காகவே இருக்கும் என்கின்றனங முதல்வங வெட்பாளஙகள்ஃ ஆளும் கட்சி மட்டும் அதிலிருந்து மாறுபடுகிறதுஃ @தமிர்;நாட்ழல் ஒரு டிசாட்டு மது இருக்காதுஃ ஒரு பைசா ஊர்ல் நடக்காது@ என்று வுறும் தலைவஙகளும் உண்டுஃ அது அவஙகள் டிகாண்ழருக்கும்  ஆஙவக் கொளாற்றின் டிவளிப்பாடெ ஆகும்ஃ
    மது இல்லாத நாடொ. நாகரீகத் டிதாட்ழலொ இருந்ததாக வரலாறு இல்லைஃ மதுவின் ஆதிக்கம் அரசின் கட்ழற்குள் இருந்தால் அது டிபாற்காலம்ஃ வரம்பஜ மீறிப் பெயாட்டம் ஆழனால் அது பொறாத காலம்ஃ இன்று மது வருவாயைக் டிகாண்டு பல்வெறு மக்கள் நலத் திட்ட';களை நடத்திக் டிகாண்ழருப்பது தமிர்;நாட்ழற்கு வந்திருக்கும் தலைகுனிவஜஃ உலக அளவில் மதுவிலக்கு தொற்றுப்பொயிருந்தாலும் ஒரு அரசின் இலக்கு மது விலக்கை நொக்கியெ இருத்தல் அவசியம்ஃ

    இந்திய அளவில் குகூராத்தில் மட்டும் இன்று மதுவிலக்கு உள்ளதுஃ மதுவிலக்கு மற்றும் மதுக்டிகாள்கையினை ஆய்வஜ டிசய்வதற்காக அ';கெ என்ஃஎம்ஃ மியாபொயி தலைமையில் ஒரு குபு அமைக்கப்பட்டதுஃ அக்குபு. @குகூராத்தில் மதுவிலக்கு இருப்பதுவும் உண்மை ஆனால் அது தொற்றுப் பொயிருப்பதுவஜம் உண்மைஃ இருந்தாலும் மதுவிலக்கு என்ற ஒன்று இருந்ததால் தான். இருப்பதால்தான் குகூராத் இந்த அளவஜக்கு முன்னெறியிருக்கிறது என்பதிலும் உண்மை இல்லாமல் இல்லை@ எனக் குறிப்பிட்டுள்ளதுஃ இது இன்று பரிசீலிக்கப்பட வெண்ழய ஒன்றுஃ

    ஆட்சியைப் பிழக்க வெண்டும் என்ற பெராசையின் காரணமாகப் பல கட்சிகள் ப{ரண மதுவிலக்கைத் தூக்கிப் பிழத்துள்ளதுஃ @கள் பொதைப் டிபாருளொ. மதுவொ அல்லஃ அது உணவின் ஒருபகுதிஃ அரசியலமைப்பஜச் சட்டம் டிகாடுத்திருக்கும் உணவஜ தெடும் உரிமைஃ ஆகவெ வாரு';கள் வாத விவாதத்திற்குஃ வா';கிக் டிகாள்ளு';கள் 10 கொழ ஞபாய் பரிசை@ என்றால் கட்சிகள் வாய்திறக்க மறுக்கின்றனஃ இவற்றை உணஙந்து தெஙதலில் வாக்காளஙகள் வாக்களித்தால் மட்டுமெ டிபாற்காலம் டிதாட';கும். இல்லையெல் பொறாத காலம் டிதாடரும்ஃ

         @எப்டிபாருள் யாஙயாஙவாய்க் கெட்பினும் அப்டிபாருள்
         டிமய்ப்டிபாருள் காண்பது அறிவஜ@    - குறள்ஃ

                                           டிசஃ நல்லசாமி
                                       கள் ஒரு';கிணைப்பாளஙஃ

தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு
(குநுனுநுசுயுவுஐழுN ழுகு வுயுஆஐடுNயுனுரு யுபுசுஐஊருடுவுருசுநுளு யுளுளுழுஊஐயுவுஐழுNளு)
செ. நல்லசாமி
செயலாளர்
அரச்சலூர் – 638 101.                              0424-2357090
ஈரோடு மாவட்டம்                                       9894099955
    15.03.2016
பத்திரிகைசெய்தி
கறிக்கோழிப் பண்ணைகளாக மாறிப்போன இந்திய கல்வி நிறுவனங்கள்
1830 பிப்ரவரி 2ஆம். தேதி பிரிட்டீ~; பாராளுமன்றத்தில் மெக்காலே ஆற்றிய உரை வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற உரை. “நான் இந்தியா முழுவதிலும் குறுக்கிலும் நெடுக்கிலுமாகச் சென்று பார்த்து விட்டேன். ஒரு திருடனையோ, பிச்சைக் காரனையோ காண முடியவில்லை. கட்டுக்கோப்பும், கட்டமைப்பும், வளமும், பண்பாடும் கொண்ட நாட்டை அடககி ஆள்வது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. இவற்றிற்கு அடித்தளமாக இருக்கக்கூடிய இந்திய கல்வித்திட்டத்தை முதலில் மாற்றியமைக்க வேண்டும்” என்றார் மெக்காலே. இந்த அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது தான் “மெக்காலே கல்வித் திட்டம”;. நாடு சுதந்திரம் பெற்று 69ஆண்டுகளாகியும் இந்தத் திட்டம் தொடர்வது வேதனைக்குரியது. அன்று இந்திய நிர்வாகத்திற்குத் தேவையான குமஸ்தாக்களை உருவாக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு இது பரிணாம வளர்ச்சி கண்டு உலகளவில் வளர்ந்த நாடுகளுக்குத் தேவையான கூலியாட்களையும், கொத்தடிமைகளையும், குமஸ்தாக்களையும் உருவாக்கி வருகிறது.
நாடெங்கிலும் பள்ளிகளும் கல்லூரிகளும் பெருகி விட்டன. படிப்போரினுடைய எண்ணிக்கை வெகுவாகக் கூடிவிட்டது. மெக்காலே கல்வித்திட்டத்தின் வழியில் கறிக்கோழிகளை வளர்க்கும் பண்ணைகளே இவை. காட்டுக்கோழிகளாக, நாட்டுக்கோழிகளாக வளர்த்து வந்த பண்டைய இயற்கையோடு இயைந்த கல்விமுறை என்றோ காணாமல் போய் விட்டது. வயிறுமுட்ட உண்ணவைத்து தேர்வு அறையில்   வாந்தி எடுக்க வைப்பதே இன்றைய தேர்ச்சி முறை. இந்தப் போட்டியில் ஒரு பருக்கைக் கூட இரப்பையில் தங்காமல் வாந்தி எடுப்பவரே முதல் மாணாக்கர். வீடுவாசல், தோட்டம்தொரவு, சொந்தபந்தம் இவற்;றைப்பற்றி அதிகளவில் அறியாதவர்களே இவர்கள். இவர்கள் பெற்றோர்களையும், பெரியோர்களையும் முதியோர் இல்லத்துக்கு அனுப்பி வைப்பதில் நாட்டம் கொண்டவர்கள்.
இந்தியா முழுவதும் 4472 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 17,45,021 இடங்கள் உள்ளன. தமிழ்நாடு முதலிடம் வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 574 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 2,88,717 மாணவர்களைச் சேர்க்க முடியும். மேலும் 508 பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் இருக்குமிடங்கள் 2,15,043 இடங்கள் உள்ளன. இரண்டிலும் சேர்த்து சுமார் 2 லட்சம் அளவிற்கு மாணவர் சேர்க்கை இல்லாமல் இடங்கள் காலியாக உள்ளன. ஒரு மாணவன் கூட சேர்க்கப்படாத கல்லூரிகளும் உண்டு. ஆகவே 170 தனியார் பொறியியல் கல்லூரிகளை வரும் ஆண்டில் மூடுவதற்கு வி;ண்ணப்பித்துள்ளனர். அதே நேரத்தில் 17 அரசுப் பொறியியல் கல்லூரிகள் புதிதாகத் தொடங்கப்படவுள்ளன. நடப்பு ஆண்டு பத்திரிகை விளம்பரங்களில் நகைகடை விளம்பரங்களே முக்கிய இடம் பிடித்துள்ளது. இதைப்புறந்தள்ளி வி;ட்டு வரும் ஆண்டுகளில் “விற்பனைக்குக் கல்வி நிறுவனம்” என்ற விளம்பரமே முதலிடத்தில் இருக்கும்.
ஒரு கண்ணாடி டம்ளர் தண்ணீரில் உப்புக் கல்லைப் போட்டு கலக்கிக் கொண்டிருந்தால் உப்பு தண்ணீரில் கரைந்து கொண்டே வரும். ஒரு தருணத்தில் உப்புக்கல் கரையாது. உப்பு கல்லாகவே இருக்கும். இதை ஆட்சியாளர்களும் உயர் அதிகாரிகளும் கல்லூரி நிர்வாகமும் கண்டுகொள்ள தவறியதால் கல்லூரிகள் புற்றீசல் போலப் பெருகிவிட்டன. இதற்கெல்லாம் முதன்மைக் காரணமாக இருப்பது வாக்களித்த வாக்காளர்களின் அறியாமையே ஆகும். என்ன வளம் இருந்தாலும், தொலை நோக்குப்பார்வையும் சிந்தனையும் இல்லாததொரு அரசு அமைந்தால் அந்த நாடு நல்ல நாடாக இருக்க முடியாது. வல்லரசாக மாறவும் இயலாது.
“ஆங்கமைவு எய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தனைவு இல்லாத நாடு”   - குறள்

செ. நல்லசாமி   

Post a Comment

Powered by Blogger.