Halloween party ideas 2015
.

வரதட்சணைக் கொடுமையை ஒழிக்க, அரசு பல சட்டங்களை இயற்றி உள்ளது.

1. வரதட்சணை கொடுப்பதும், அதை பெற்றுக் கொள்வதும் சட்டபடி குற்றமாகும். இக்குற்றத்திற்கு, ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையுடன், ரூ.15,000/- க்குக் குறையாத அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும்.

2. வரதட்சணையை நேரிடையாகவோ, அல்லது மறைமுகமாகவோ கோரினால், 6 மாதங்களுக்குக் குறையாத சிறைத் தண்டனையுடன், ரூ. 10,000/- வரை அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும்.

3. வரதட்சணைச் சாவுக்குக் காரணமானவருக்கு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். சில சமயங்களில், அவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டாக வேண்டும்.

4. ஒரு பெண்ணின் கணவனோ, அல்லது அவள் கணவனின் உறவினரோ, அப்பெண்ணைக் கொடுமைக்கும் துன்பத்திற்கும் ஆளாக்கினால், அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை, அல்லது அபராதம் விதிக்கப்பட்டாக வேண்டும்.

(நன்றி: வழக்கறிஞர் முனைவர் சோ.சேசாலம் எழுதிய ‘பெண்ணுரிமைச் சட்டங்கள்’)

Post a Comment

Powered by Blogger.