Halloween party ideas 2015
.

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 03.03.2016 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநில பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன் அவர்கள், திராவிடர் இயக்கத்தின் மீது தமிழ் தேசிய புரட்டர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த பதிலடி கொடுத்தார்.

அவரின் உரையில் சில பகுதிகள்..
"திராவிடர் இயக்கம் என்ன செய்தது? என்று சில தமிழ் தேசிய புரட்டர்கள. கேட்க ஆரம்பித்துள்ளனர். அட மடையா.. இப்படி கேட்பதற்கான அறிவை கொடுத்ததே திராவிடர் இயக்கம்தானடா.. இந்த இயக்கம் மட்டும் இல்லையென்றால் சிவகங்கையில் எங்கோ ஒரு மூலையில் நீ ஆடு, மாடு மேய்த்துக்கொண்டுதானே இருந்துருப்பாய்..

திராவிடர் இயக்கம் தமிழுக்கு என்ன செய்தது? சமஸ்கிருதப் பெயர்களாகவும், ஆங்கிலப் பெயர்களாகவும் இருந்த தமிழர் பெயர்களை தூய தமிழில் வைக்க செய்ததே திராவிடர் இயக்கம்தானே. தன் பெயருக்கு முன்னால் இடும் தலைப்பெழுத்தை தமிழில் இட்டு, அதில் வெற்றியும் பெற்றது இந்த இயக்கம் தானே..

ஆடு, மாடு மேய்ப்பதை அரசுத் தொழிலாக்குவேன் என்று கூறிகிறாயே; அது குலக் கல்வி திட்டத்தின் இன்னொரு முறை என்று உனக்கு தெரியாதா? ஆடு, மாடு மேய்ப்பதை அரசுத் தொழிலாக்கி விட்டால், இவர்கள் மீது சமுதாயம் வைத்திருக்கும் பார்வை மாறிவிடுமா?

அப்படிப்பார்த்தால் என் அருந்ததிய சகோதரன் மலம் அள்ளுகிறானே, சாக்கடையை சுத்தம் செய்கிறானே, அதுவும் அரசாங்க வேலைதானே அவன் மகன் து இச் சமூகத்தின் பார்வை மாறிவிட்டதா??

" ஆடு, ,மாடு மேய்ப்பதை அரசு வேலையாக்குவது உங்கள் தமிழ் தேசியம்..
ஆடு, மாடு மேய்ப்பவனை அய்.ஏ.எஸ் ஆக்குவதுதான் திராவிடர் தேசியம்" என்று கூறனார்..

Post a Comment

Powered by Blogger.