Halloween party ideas 2015
.

இரு வேறு சாதியில் பிறந்த பட்டதாரிகள் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதால் இளைஞர் படுகொலை! 

எத்தனை #இளவரசன்களை இப்படி நாம் இழக்கப்போகிறோம்?

பொள்ளாச்சி தனியார் கல்லூரியில் படித்து வந்த உடுமலையைச் சேர்ந்த தலித் தேவேந்திரர் பிரிவு இளைஞர் சங்கர், பழனியைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சாதி தேவர் பிரிவு பெண் கவுசல்யா காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 

8 மாதம் கழித்து பெண்ணின் தாய்மாமன் சிலருடன் பட்டப்பகலில் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சங்கரை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். கவுசல்யாவையும் வெட்டியுள்ளனர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எங்கே சென்று கொண்டிருக்கிறது நமது தமிழ்ச் சமூகம்?

இருவரும் மனிதர்கள் - தமிழர்கள் என்றாலும், ஒருவரை ஒருவர் விரும்பி திருமணம் செய்து கொண்டாலும் இருவரையும் சமமாக பார்க்கவில்லை சாதி ஆதிக்க சிந்தனை, சமூகச் சூழல். பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு என்ற சாதியமே இந்த கொலைக்குக் காரணம், வேறென்ன? இதை அராசங்கமும் தடுக்காமல் ஊக்குவிக்கிறது.

உணர்ச்சிமிக்க பேச்சுகளால் அல்ல, பொருளியல் மற்றும் அரசியல் நலனுக்காக சில சாதி ஆதிக்க சக்திகளால் தூண்டிவிடப்பட்டு நடக்கும் சாதிய வன்கொடுமைகளை தடுத்து நிறுத்தவும் - சாதிய ஏற்றத்தாழ்வு ஒழித்து அனைவரும் சமத்துவமாக வாழவும் இளைஞர்களாகிய நாம் நமது நோக்கத்தையும் செயல்பாட்டையும் ஆக்கப்பூர்வமாக செலுத்தினால் மட்டுமே இந்த கொடூரங்களை நிறுத்த முடியாது.

தமிழ்ச் சமூகத்தின் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் முதல் தடை இந்த சாதிய ஏற்றத்தாழ்வு சமூக அமைப்பே என்பதை நாள்தோறும் பல இளவரசன்களின் படுகொலைகள் நினைவுபடுத்திக் கொண்டேதான் இருக்கின்றன....

- இளந்தமிழகம் இயக்கம்.
13 / 3 / 2016.




Post a Comment

  1. Stupid thai maman. He should be paraded on the same street and given whip treatment to maximum and punised maximum by the Court. He should also pay huge amont as maman seer to Kousalya

    ReplyDelete

Powered by Blogger.