Halloween party ideas 2015
.

 பகை மட்டுமே எங்கள் கண்ணில் தெரியும். பகையின் குடும்பம் அல்ல. ஒரு இனத்தின் அழிவை விரும்பாமல் ஒரு யுத்தம் வரலாறு கண்டது எனில் அது புலிகளையும் தலைவர் பிரபாகரனையுமே சாரும். சிங்களம் என்றொரு இனத்தை அழித்து எங்கள் உரிமைகளை கேட்க வில்லை ஆனால் அங்கே பகையாக கொண்டது சிறிலங்கா அரசை மட்டுமே.

சிங்கள இனம் அழிய வேண்டும் என நினைத்திருந்தால் பல நூறு முள்ளிவாய்க்கால் கண்டிருக்கும் சிறிலங்கா அரசு. மக்களை காப்பாற்றி இராணுத்துடன் சண்டை இட்டு வெற்றி பெறும் தன்மையினை எம் தலைவன் எமக்கு உளமார கற்றுக்கொடுத்தான். வரலாற்று நாயகர்கள் என பலராலும் ஏன் சிங்களவர் கூட போற்றும் அளவில் எமது இயக்கம் அமைந்தது.

சிங்கள அரசு முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைப்பது போல தமது நடவடிக்கைகளை மேட்கொண்டு மக்களை பணயமாக்கி வெற்றி கண்டதாக பல நூறு தடவைகள் மார்பில் தட்டிக்கொண்டன. அதர்மம் தலைக்கேறி தர்மம் தலை கீழானது. எப்படிப்பட்ட இறுக்கமான கட்டத்திலும் பொது மக்களுக்கு எந்த வித பாதகமும் வரக்கூடாது என எந்த களம் ஆரம்பமானாலும் தலைவரின் முதலாவது கட்டளையாக இருக்கும்.

வெதுப்பும் வெயிலும் மழையும் கண்டு அஞ்சாமல் தன் நிலை எடுத்து துப்பாக்கியால் வெளிவிடும் தோட்டாக்கள் அத்தனையும் அழிவை விரும்பவில்லை. பாயும் தோட்டாக்களும் கூறும் இதுவே இறுதியாக இருக்கட்டும் என்று. ஒரு புலி வீரனுக்கு இருந்த மனித நேயம் இராணுவ சிப்பாய்க்கு இருக்க வாய்ப்பில்லை. அவன் கண் முன் குருதியின் பெறுமதி உணர வாய்ப்பில்லை. அவனுக்கு வழங்கப்படும் பயிற்சி இனத்தை துவேசமாக்கும் பயிற்சி. ஆனால் எங்கள் வீரனுக்கு வழங்கிய பயிற்சியில் ஒரு சாதாரண மனிதனில் உணர்வுகளையும் மன நிலையையும் உள்வாங்கி வழங்கப்பட்டிருக்கும். அதனால் தான் களங்களும் சரித்திர பதிவானது. மாண்டோரும் தெய்வங்களாக மதிக்கப்படுகின்றனர்.

சிங்களம் செய்த தவறுக்கு கொன்று வஞ்சம் தீர்த்தாலும் ஆறாது. ஆனால் கொல்ல வில்லை. அதனால்தான் முள்ளி வாய்க்கால் மயானமானது.

புலிகளை பற்றிய விமர்சனங்கள் செய்பவர்கள் அறிவதில்லை இன்றும் உங்கள் உயிர், மொழி, தகமைகள் இருக்கிறது எனில் அது புலிகளின் ஈகங்களே. புலிகள் அந்த முப்பது ஆண்டுகள் எமது அடையாளங்களை தக்கவைக்க பட்ட அனுபவங்கள், காவு கொண்ட உயிர்கள் சான்று. அவர்கள் அப்படி போராடவில்லை எனில் ஈழத்தில் மட்டுமல்ல உலகிலேயே தமிழர் என்றொரு அடையாளம் அகற்றப்பட்டு காணமால் போனவரை தேடுவதை போல தமிழரும் தேடப்பட வேண்டிய நிலைக்கு போயிருப்போம்.

Post a Comment

Powered by Blogger.