Halloween party ideas 2015
.

'இலங்கை சிங்களவர்களுக்கு சொந்தமானது, தமிழர்கள் எல்லா அதிகாரங்களிலும் இருக்கிறார்கள், அவர்கள் வந்தேறிகள், அவர்களை விரட்ட வேண்டும்' என்பதுதான் சிங்களப் பேரினவாதம்.

பிழையான கற்பிதங்களின் அடிப்படையில் தம்மை விட குறைவான மக்கள் கூட்டத்தின் மீது அச்சத்தை உருவாக்கி தனது அதிகாரத்தை நிலை நிறுத்தியது சிங்களப் பேரினாதம்.

யேர்மனியில் ஹிட்லர் இதை செய்தான். அங்கே யூதர்களை காட்டி, 'வந்தேறிகள்' என்றான். இவர்களால்தான் முதலாம் உலகப்போரில் தோற்றோம் என்றான். யூதர்கள் எல்லா இடங்களையும் ஆக்கிரமிக்கிறார்கள் என்றான். அப்படி உருவானது நாசிசவாதம்.

நாசிசவாதம் மிகப் பெரிய அழிவைக் கொடுத்தது. சிங்களப் பேரினவாதம் தமிழர்களை இனவழிப்பு செய்தது.

இன்றைக்கு சிங்களப் பேரினவாதத்தின் தத்துவத்தை சீமான் கையில் எடுத்திருக்கிறார். சிங்களம் தமிழர்களை நோக்கி உமிழ்ந்த இனவாதத்தை சீமான் தமிழ்நாட்டில் வாழும் சில சமூகங்கள் மீது உமிழ்கின்றார்.

இனவாதத்திற்கு எதிரானது பிரபாகரனிசம். ஈழத் தமிழர்களின் விடுதலைத் தத்துவம் இது.
விடுதலைத் தத்துவத்தின் மீது நம்பிக்கை உள்ள ஈழத் தமிழர்கள் சீமானின் பேரினவாதத்தை முழு மூச்சோடு எதிர்க்க வேண்டும். தலைவர் பிரபாகரனினதும், அவர் நடத்திய விடுதலைப் போராட்டத்தினதும் மாண்பைக் காக்க வேண்டும் என்று கருதுகின்ற ஈழத் தமிழர்களின் கடமை இது.

பிரபாகரனின் பிள்ளைகள் என்று சொல்லிக் கொண்டு, இனவாதம் பேசுவதையும், ஆதித் தமிழக் குடிகள் மீது வன்மத்தை வளர்ப்பதையும் அனுமதிக்க முடியாது.

Post a Comment

Powered by Blogger.