Halloween party ideas 2015
.




அன்பு நெஞ்சங்களே...


வணக்கம்!   நமது தமிழ்த்தேரின் 99வது சிறப்பிதழாக "காதல் பொதுமறை" என்னும் தலைப்பில் - கவிதைகள் மற்றும் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன!!  அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 15.03.2016.  மின்னஞ்சல் முகவரி: 


TAMILTHER DUBAI <tamilther.dubai@gmail.com>, 

Ziavudin Ahmed Syed Ibrahim <superstarzia@gmail.com>, 

KAVIRI MAINDHAN <thamizhnadhi2014@gmail.com>


மேலும் அமீரகத்தில் கடந்த 10 ஆண்டுகளைக் கடந்து 11ஆம் ஆண்டில் காலடி எடுத்துவைக்கப்போகும் நமது தமிழ்த்தேர் இலக்கிய மாத இதழின் 100வது சிறப்பிதழ் வெளியீடு - வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது.   காலத்தின் ஓட்டத்தில் பல்வேறு சுமைகளைத் தாங்கியும் அன்னைத்தமிழுக்கு அணியாரம் சூட்டிமகிழும் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் சார்பில் வெளியாகும் தமிழ்த்தேரில் .. 100 வது இதழில் உலகெங்கும் வாழும் தமிழ்க்கவிஞர்கள், படைப்பாளர்கள் பங்கேற்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.  குறைந்தது 100 படைப்புகள் தாங்கிய இதழாக அதனை வெளியிட விரும்புகிறோம்.  பதிப்பாசிரியரின் இந்த விழைவை நான் வழிமொழிகிறேன்.  இதற்கான அச்சாரமாக 99வது இதழும்கூட ஒரு முன்னோட்டமாக அமையட்டும்!  தாங்கள் தங்களின் படைப்புகளை அனுப்புவதோடு.. தங்கள் இலக்கிய வட்டத்தில் உள்ள ஏனைய எழுத்தாளர்களை.. கவிஞர்களை.. படைப்பாளர்களை் தமிழ்த்தேரில் இடம்பெறச் செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.  


முன்னோட்டம்:


இருவிழியசைவினில் இவ்வுலகம் வசப்படும்!

இமைப்பந்தல் நிழலுக்குள்  இதயங்கள் சுகப்படும்!

ஒருவருக்காக ஒருவர் என்பது புலப்படும்!

ஒவ்வொரு விடியலும் சொர்க்கத்தில் எனப்படும்!

 

காதல் என்னும் சுவாசக் காற்றை ...

வாழும் உயிர்கள் யாவும் நாடும்!

தேவன் தந்த ஜீவ நாதம் 

வேண்டும் என்றே உள்ளங்கள் ஏங்கும்!

 

உலகம் முழுமைக்கும் உரிய பொதுமறை 

வேதம் போலவே காணும் நடைமுறை..

வாழும் வாழ்க்கைக்கு இதுவே அடிப்படை 

மாறும் புவிதனில் மாறா வழிமுறை

 

அன்பெனும் சொல்லால் அகிலம் சுழலும் 

அதற்கிணை எதுவும் ஜகத்தினில் இல்லை!

அடுத்தத் தலைப்பே 'காதல் பொதுமறை'

படைத்திட வேண்டும் தமிழ்த்தேர் சிறப்பிதழ்!!

 

காதல் பொதுமறை......



--
கவிஞர் காவிரிமைந்தன் 
நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் 
கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் 
பம்மல்,  சென்னை 600 075
தற்போது - அபுதாபி - அமீரகம் 
00971 50 2519693
00971 50 4497052



--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com


Post a Comment

Powered by Blogger.