Halloween party ideas 2015
.

சமூக நீதி,,, ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் , சாதிய ஒடுக்குமுறை  இப்படி  எல்லாதளங்களிலும்  மக்கள் மன்றம் குரல் கொடுத்து வருகிறது…

பொதுவுடைமை சித்தாந்தங்களை உள்ளடக்கி  பொதுவாழ்வகமாக வாழ்ந்து வரும்  மக்கள் மன்றம்    தனிமனித வாழ்க்கை முறைக்கு அப்பாற்ப்பட்டது…

ஆண் ,பெண் என்று இருந்தாலும்  சமத்துவம்  என்ற அடிப்படையில்   இணைந்து வாழும் கம்யூன் முறை  ஆகும்…
  இதன் செயல்பாடுகள் அணைவரும் அறிந்த ஒன்றே……

இதன் முக்கிய நோக்கம் அரசு அதிகாரங்களை மக்கள் கையில் எடுக்க வேண்டும் என்பதே .. முக்கிய கோட்பாடு..உடுமலை சங்கர் கொலையைப்போலவே சூட்டோடு சூடா சாதி மறுப்பு திருமணம் முடித்துக்கொண்டு மக்கள் மன்ற பாதுகாப்பிலிருக்கும் சிவராமையும்....தொடர்ந்து சாதிமறுப்பு திருமணம் செய்து வைத்து சாதி வெறியர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் மக்கள் மன்றத்தின் ஒருங்கினைப்பாளர் அக்கா மகேசையும், அக்கா ஜெசியையும், அக்கா கீதாவையும் போடுவதற்காகா கூலிப்படையிடம் ரூபாய் 3 லட்சம் கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல்  உளவுத்துறை மூலம் வெளியாகியுள்ளது.. .இதற்கு  காவேரிபாக்கம் காவல் ஆய்வாளர் சந்திரசேகரனும் உடந்தை....ஏனெனில்   வேலூர் மாவட்டம் களத்தூர் மணல் குவாரிக்கு எதிராக  அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். அதற்கு ஆதரவாக  மக்கள் மன்றம் குரல் கொடுத்து வந்தது  மணல் கொள்ளையர்களை  கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்றது… இதனால்   எந்த வழியில்   மக்கள் மன்றத்தின் மீது  பொய்வழக்கோ அல்லது  வன்முறையையோ ஏவும் தருணத்தை எதிர்பார்த்திருந்த  காவல்துறை  தற்போது சாதி மறுப்பு திருமணங்களை ஆதரிக்கும் முறையை கையில் எடுத்துள்ளது….தற்போது சாதிமறுப்பு திருமணம் செய்து மக்கள் மன்றத்தில் அடைக்கலமாக  இருக்கும் சிவராமன் தம்பதியை வைத்து மக்கள் மன்றத்தை   சூரையாட  குறிவைத்துள்ளது…

மக்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர்களான   மூன்று பெண்களின் உயிரை காவு வாங்க  சாதி வெறி கும்பல்   திட்டம் தீட்டியுள்ளது…

இளவரசனை கொன்று தருமபுரி MP தொகுதியை கைப்பற்றியதைப்போல சிவராமனை கொன்று சோழிங்க நல்லூர் சட்டமன்ற தொகுதியில் அன்புமணி மனைவி சவுமியாவை வெற்றிபெற வைக்க திட்டமாம்...!
மகேசு அக்காவின் பதில்கள்;

அக்கா கொஞ்சம் கவணமாயிருங்கக்கா.. அட போங்க தோழர் அவனுங்களுக்கு பயந்துகிட்டு நம்ம வேலை செய்யாம இருக்க முடியுமா..? போற உயிரு மக்களுக்காக போய்ட்டுப்போகுது... செய்தியை கேள்விப்பட்டு 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மக்கள் மன்றத்தில் பெரிய கொய்யா ,சின்ன கொய்யா அல்லக்கைகளின் வருகையை எதிர் நோக்கி ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றோம்... போகாதுக்கா நாங்க உயிரோடிருக்கும்வரை உங்க உயிர் மட்டுமல்ல ,மயிரக்கூட எவனும் தொடமுடியாது....
அடங்கி வாழ்வது அவமானம்.!!
போராடி வாழ்வது தன்மானம்.!
பொறுக்கிகளுக்கு பாதுகாப்பு 
???போராடுபவர்களுக்கு சிறைச்சாலை.??????
- செய்தி தோழர் விஜி

Post a Comment

Powered by Blogger.