Halloween party ideas 2015
.

தோழர்களே....திருப்பூர் மாவட்டம் உ;டுமலையில் நேற்று பகலில் ஒரு சாதி மறுப்பு மணம் புரிந்த இணையர் ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளனர்....இது போன்ற ஆணவக் கொலைகளுக்கு திருமணப் பதிவாளர்களும் காரணமாக இருக்கிறார்கள்....கடந்த 09.03.2016 புதன் காலை ஒரு சாதி மறுப்புத் திருமணம் அம்பேத்கர்-பெரியார் கலப்புத் திருமணம் செய்தோர் நலச்சங்க வளாகத்தில் நடைபெற்றது....அதனை பதிவு செய்ய பதிவாளர் அலுவலகத்தில் சங்க ஊழியர், இணையர்கள் & சாட்சிகள் காலை 10.00 முதல் இரவு 7.30 மணி வரை காத்திருந்தனர். காரணம் வேறு ஒன்றுமில்லை.... மதம் என்ற இடத்தில் “இந்து (அதாவது பார்ப்பானின் வைப்பாட்டி மக்கள்)” என்று போட வேண்டுமாம்.... நாம் ”தமிழர்” என்று விண்ணப்பத்தில் போட்டுக் கொடுத்திருந்தோம்.

இதனை காரணம் காட்டி திருமணப்பதிவும் செய்யாமல் / நிராகரிக்கவும் செய்யாமல் திருமணப் பதிவாளர் மாயமாகி விட்டார்.வியாழன் 10.03.2016 மதியம் 1.00 மணிக்கும் மதம் என்ற இடத்தில் “இந்து (அதாவது பார்ப்பானின் வைப்பாட்டி மக்கள்)” என்று போடாமலும் தன்மானத்தோடு ”தமிழர்” என்று விண்ணப்பத்தில் போட்டுக் கொடுத்த காரணத்தாலும் நிராகரிக்கப்பட்டது....இதனை சட்டப்படி செய்ய வேண்டுமானால் 09.03.2016 மாலைக்குள் செய்திருக்க வேண்டும்..... ஆனால் அப்படி செய்யாமல் வேண்டுமென்றே ஒன்றரை நாள் முழுக்க காக்க வைத்து 10.03.2016 மதியம் 1.00 மணிக்கு நிராகரித்த காரணத்தால் தான் நமது போராட்டம்.....சட்டப்படியான போராட்டத்தை மேல்முறையீட்டிலும், உயர் நீதிமன்றத்திலும் செய்யும் அதே வேளை மக்கள் மன்றத்தில் இதனை கொண்டு செல்ல வேண்டி முன்னெடுத்துள்ளோம்....சாதி மதம் ஒழிய விரும்பும் அனைவரும் ஆதரவு தாரீர்....

தமிழன் என்ற மதம் உள்ளதா? இல்லாத ஒன்றை, எழுதிக் கொடுத்தால் எப்படி அது பதிவு செய்யப்படும்?

மேலும் சாதி மறுப்பு திருமணம் என கதையளக்க வேண்டாம், இப்படி திருமணம் செய்யும் நபர்கள், சாதி ரீதியான எந்த சலுகையும் பெறுவதில்லையா என்ன? இருவரில் யாருடைய சாதிக்கு சலுகை அதிகமோ அதை பயன்படுத்திக்கொண்டு சலுகை பெறுபவர்கள், சாதி மறுப்பு என எதற்காக பொய்வேடம் போட வேண்டும்?

பள்ளியில் சாதி, மதம் போடாமல் சேர்ப்பது போல, திருமண பதிவை செய்ய சிலர் விரும்புகின்றனர். சாதி இட ஒதுக்கீடு தேவை இல்லை என முடிவெடுக்கின்றனர்..

சங்கராச்சாரியாரின் சமஸ்கிருத வழி இந்து மத முறைகளை ஏற்காமல் தமிழ்ச் சித்தர்கள் , நாயன்மார்கள், ஆழ்வார்கள் வழியில் தமிழ் முறையில் வழிபாடு செய்யும்  குன்றக்குடி அடிகளார், கோவை பேரூர் அடிகளார் போன்றோர் நடைமுறை தமிழர் மதம் எனலாமே...

Post a Comment

Powered by Blogger.