Halloween party ideas 2015
.

மார்ச் 12 , 13 ( சனி, ஞாயிறு ). சனிக்கிழமை காலை 9.30 துவங்கி. ஞாயிறு மாலை 5.00 மணிவரை நடைபெறும் . .

> பயிற்சி நிகழ்விடம் : "வானகம்" நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் , சுருமான்பட்டி , கடவூர் , கரூர் மாவட்டம் .

> தனிமனித விடுதலை என்பது தற்சார்பிலிருந்து தொடங்குகிறது
நாட்டிலுள்ள ஒவ்வொரு தனிமனிதனும் தற்சார்பாக வாழவேண்டும் என்பது இயற்கை வாழ்வியல் அறிஞர் அய்யா கோ.நம்மாழ்வார் அவர்களின் பெருவிருப்பம் . அப்பெருவிருப்பத்தின் பயனாக விளைந்ததே வானகம் என்னும் நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் . அய்யா கோ.நம்மாழ்வார் அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் அலைந்து திரிந்து இந்த சமூகத்திடமிருந்து கற்றறிந்த அத்துணை வாழ்வியல் நுட்பங்களையும் தத்துவங்களையும் இப் புவியிலுள்ள அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ விதைகளை வானகத்தில் விதைத்துச் சென்றுளார் . அவ்விதைகள் வேர் பரப்பி விருட்சங்களாகி  விதைகளை பரவலாக்க இரு கரம் விரித்து தங்களை  இணைத்துக்கொள்ள வானகம்  காத்துக் கொண்டிருகிறது . தற்சார்பு வாழ்விற்கான விதைகளை ஏந்திசென்று இச்சமுகம் இன்புற்று வாழ வானகம் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது .

. ""எல்லாவற்றையும் பணமாக பார்க்கும் மனோபாவத்தை மக்களிடம் பரப்பிய உலகமயமாக்கல் என்ற அதிகாரம் இனி தோற்கும்... ஏனெனில், மக்கள் "இயற்கைக்குத் திரும்பும் பாதையை" கண்டறிந்து விட்டனர்.""
- கோ.நம்மாழ்வார்

இப் பயிற்சியில்
* இயற்கை வழி வேளாண்மை > இடுபொருள் செய்முறை பயிற்சி , களப்பயிற்சி, வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம் , கால் நடை பராமரிப்பு , சிறுதானிய பயிர் சாகுபடி ,
* மரபு மருத்துவம்
* மரபு விளையாட்டு
* வாழ்வியல் கல்வி
ஆகியவை இடம்பெறும் .

> பயிற்சியில் 50 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது.
> பயிற்சியை வானகம் கல்விக் குழுவினர் வழங்குவார்கள்.
> பயிற்சி குறித்த நேரத்தில் சனிக்கிழமை காலை 9.30 துவங்கி. ஞாயிறு மாலை 5.00 மணிவரை நடைபெறும் .
> பயிற்சி நன்கொடை : ரூ.1200/- (உணவு, தங்குமிடம் , பயிற்சி உட்பட) .
> முன்பதிவு அவசியம். தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும் .
> முன்பதிவுக்கு: 95666 67708 .
( முன்பதிவு நேரம் : காலை 7 மணிக்கு மேல் இரவு 9 மணிக்குள் மட்டுமே )
> பயிற்சிக்கு வரும்போது புகைப்படம் மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கொண்டு வரவும் .

நன்கொடை செலுத்த வேண்டிய விவரங்கள் :
வங்கி கணக்கு எண் :

Nammalvar Ecological Foundation A/C No: 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank Name : Indian Overseas Bank,
Branch Name : Kadavoor branch, karur district , tamilnadu .

குறிப்பு :

1. வெளியிலிருந்து கொண்டுவரும் உணவு பொருட்கள் அனுமதிக்கப்படாது , பாலித்தின் பைகள், சோப்பு , ஷாம்பு, பேஸ்ட், கொசுவர்த்தி போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயணங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும்.
2. பயிற்சியின் இடையே வெளியில் செல்லவோ , வெளியில் தங்கவோ அனுமதியில்லை .
3.களப் பயிற்சிக்கு தேவையான உடை மற்றும் போர்வை , கைவிளக்கு (torch) எடுத்து வரவும்.
4. பயிற்சியின் இறுதியில் பங்கேற்பு சான்றிதல் வழங்கப்படும்.

> பயிற்சியின் இறுதியில்

1. அய்யா நம்மாழ்வாரின் புத்தகங்கள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட தலைப்புகளில் பல்வேறு புத்தகங்கள் விற்பனைக்கு கிடைக்கும் .
2. வானகம் இரு மாத இதழ்
3. அய்யா நம்மாழ்வாரின் உரைகள் அடங்கிய காணொலி குறுந்தகடுகள்
4. சத்துமிகு தானியங்களான வரகு, திணை , குதிரைவாலி, கம்பு, மலைத் தேன் , சிருதானியங்களில் தயாரிக்கப்பட்ட தின்பண்டங்கள் , செக்கு எண்ணெய்கள், நாட்டு சர்க்கரை, பாரம்பரிய அரிசிகள் , மூலிகை தேநீர் பொடி போன்ற பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்படும்.

'நமக்கான உலகை இயற்கையின் வழியில் உருவாக்குவோம்...
நம்முடைய சந்ததிகள் போற்ற வாழ்வோம்...'

Post a Comment

Powered by Blogger.