Halloween party ideas 2015
.

மக்கள் நலக்கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் வைகோ, தொல்.திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன் ஆகியோர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து ஆலோசித்து வருகின்றனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் அதிகாரபூர்வ அழைப்பை ஏற்றே அவரது கட்சி அலுவலகத்துக்குச் செல்கிறோம்.

மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக இணைந்து போட்டியிடும். மக்கள் நலக் கூட்டணி - தேமுதிக இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தாகும் என தெரிவித்தார்.

செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்தை மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் சந்திக்கிறோம்.

அவரது அழைப்பை ஏற்று இந்த சந்திப்பு நடைபெறுகிறது. பேச்சுவார்த்தைக்குப் பின் நல்ல செய்தியை அறிவிப்போம் என தெரிவித்தார்.

இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக 124 தொகுதிகளில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் நலக்கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் 110 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.



Post a Comment

Powered by Blogger.