Halloween party ideas 2015
.

'இவருக்கு தேச பக்தி இல்லையா?' என்று பெரியாரைப் பார்த்துக்கேட்டார்கள்.

பெரியார் சொன்னார். "நான் மனிதனை நேசிக்கிறேன். எனக்கு மனிதநேயம்தான் முக்கியம்!" என்று சொல்லி ஒரே வார்த்தை கேட்டார்.

"என்ன தேச பக்தி?  எனக்கு பக்கத்து வீட்டுக்காரன் என்னைத் தொட்டால் குளிக்க வேண்டும் என்று சொல்லுகின்றான். என்னைப் பார்த்தால் ஏழு மைல் ஓட வேண்டும் என்று சொல்லுகின்றான். தீட்டு பட்டுவிடும் என்று ஓடுகிறான்!

யார் அந்நியன்?

பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து வந்தவன். "ஹலோ!" என்று சொல்லி என்னிடம் கைகுலுக்குகின்றான். இவன் எனக்கு அந்நியனா? அவன் எனக்கு அந்நியனா?" என்று கேட்டார்.

இதுவரையில் யாராவது பதில் சொல்ல முடிந்ததா?

-"விடுதலை” 28-1-2012

Post a Comment

Powered by Blogger.