Halloween party ideas 2015
.

காவேரிப்பாக்கம் அருகே பெரியகிராமம் பேருந்து நிறுத்தம் அருகில்  தாபா ஓட்டல் ஒன்று இயங்கி வருகிறது. இங்கே சாப்பிடுவதற்காக பஸ் நிற்க்கும் இடத்தில் லாரிகளை நிறுத்திவிட்டு சென்று விடுகிறார்கள்.இதனால்  இங்கு மாதத்திற்கு இரண்டு முறையாவது விபத்துகள் ஏற்படுகின்றன.இந்த தகவலை பலமுறை காவல்துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை, அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் வேன்களுக்கு அவ்வழியாக செல்ல மிகவும் சிரமமாக உள்ளது.இரவு நேரத்தில் வேலைக்கு சென்று வீடு திரும்ப பயமாக உள்ளது. இதுவரைக்கும் தாபா ஓட்டல் உரிமையாளர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை.அந்த ஓட்டல் 24 மணிநேரமும் நடத்த படுகிறது.அந்த வழியாக செல்லும்ஹைவே பாட்ரோல் அங்கு நிற்கும் லாரிகளை கண்டுக் கொள்வதேயில்லை.இது குறித்து RDO விடம் நேரடியாக சென்று தெரிவித்தும் பலனில்லை.அங்கு நடக்கும் விபத்துக்கு காரணம் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகள்.இதை யாரிடம் கொண்டு சென்றால் முடிவுக்கு வரும்..மக்கள் நலனை கருதி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு இரா.தினேஷ் காந்தி விடுதலை சிறுத்தை கட்சி

Post a Comment

Powered by Blogger.