Halloween party ideas 2015
.

சமூக வலைத்தளங்களான முகநூல் மற்றும் வாட்ஸ் அப் போன்றவற்றில் தீரன் சரவணன் குருசாமிக் கவுண்டர் என்ற நபர்,தான் தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை என்ற அமைப்பைச் சார்ந்தவர் என்று கூறிக் கொண்டு

கொங்கு இனத்தைச் சார்ந்த பெண்களைக் காதலித்தால் பஸ்,லாரியை எற்றிக் கொலை செய்வோம் என்று கொலைமிரட்டல் விடுத்துள்ளார்..

மேற்படி நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரோடு தெற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஈரோடு கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது..

மாவட்டச் செயலாளர் சண்முகப்பிரியன்,பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி,மாவட்ட அமைப்பாளார்கள் குமார்,சென்னிமலை செல்வராசு,மாநகரச் செயலாளர் சிவானந்தம், சிவக்குமார்,மோகன்ராஜ்,விடுதலை வேங்கைகள் கட்சி நிறுவனர் தோழர்.தமிழின்பன்      ஆகியோர் மனு அளித்தனர்..

Post a Comment

Powered by Blogger.