Halloween party ideas 2015
.

📡இன்றைய🚨முக்கிய📡செய்திகள்  29/02/16 !

கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயத்தை இடிக்கும் சதிச் செயலில் இலங்கை அரசு ஈடுபடுவதாக தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் குற்றச்சாட்டு.

வாக்காளர் பட்டியலில் இருந்து 6½ லட்சம் பெயர்கள் நீக்கம் : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தினமும் தேசியகொடி ஏற்ற வேண்டும் : மத்திய அரசு உத்தரவு.

ஜே.என்.யு விவகாரம் குறித்து விவாதிக்க மாணவர்களுக்கு தடை: சென்னை பல்கலைக் கழகம் அதிரடி உத்தரவு

பதன்கோட் தாக்குதல்: பாகிஸ்தானில் கைதான 3 தீவிரவாதிகளுக்கு போலீஸ் காவல்

சிவில் சர்வீசஸ் நேர்முக தேர்வுக்கு அழைப்பு கடிதம் கிடையாது இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

ரெயில் பயணிகளுக்கு சிரமம் ஏற்படாத வகையில் எமர்ஜென்சி கோட்டாவில் கீழ்படுக்கை ஒதுக்கீடு : தெற்கு ரெயில்வே

பாராளுமன்ற கூட்டத்தை சென்னை, மும்பை, கொல்கத்தா நகரங்களிலும் நடத்த வேண்டும்: காங்கிரஸ் எம்.பி. யோசனை

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண கவர்னரை சுட்டுக்கொன்ற மும்தாஜ் காத்ரி என்பவருக்கு இன்று அதிகாலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

மும்பை அருகே 14 பேர் கொலை: பிணக்குவியலை கண்டு படம் பிடிக்க வந்த கேமராமேன் அதிர்ச்சியில் இறப்பு

மக்கள் நலக் கூட்டணி ஆட்சியமைக்கும் போது தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் தமிழ் ஆட்சி மொழி : திருமாவளவன்

திமுக காங்கிரஸ் இயலாமையால் உருவான கூட்டணி: தமிழிசை சவுந்தரராஜன்.

தமிழகம் முழுவதும் நடத்தும் சுற்றுப்பயணம் முடிந்த பின் கூட்டணி குறித்து அறிவிப்பேன்: ஜிகே.வாசன்

சி.பி.எஸ்.இ 10–ம் வகுப்பு, பிளஸ்–2 தேர்வு நாளை தொடக்கம்

கடந்த சட்டசபை தேர்தலில் எனது பிரசாரத்தால் அ.தி.மு.க.வுக்கு 8 சதவீதம் கூடுதல் வாக்கு: சரத்குமார்

அப்துல் கலாம் பெயரில் புதிய கட்சி: கலாம்  குடும்பத்தினர் அதிருப்தி

நான் குழந்தை இல்லை, நீங்களும் தாய்மையான அமைச்சரும் இல்லை: ஸ்மிரிதி இரானிக்கு ஜே.என்.யு மாணவர் பளீர் கடிதம்

ரோகித் வெமுலா தற்கொலை பற்றி பாராளுமன்றத்தில் பேச்சு: உரிமை மீறல் பிரச்சினை கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் தீவிரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் 70 பேர் பலி.

இஷ்ரத் ஜகான் என்கவுண்டர் வழக்கு: சிதம்பரத்திற்கு எதிராக விசாரணையை தொடங்க பாஜக திட்டம்

கடந்த சட்டசபை தேர்தலில் தனது பிரச்சாரத்தால் அ.தி.மு.க.வுக்கு 8 சதவீத வாக்கு அதிகரித்தது : சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்.

மந்தைவெளி கல்லறை தோட்டத்தில் நாளை மாலை 3 மணிக்கு நடிகர் திரு.குமரிமுத்து உடல் அடக்கம்.

ஆட்சியில் பங்கும், 60 தொகுதிகளும் வேண்டும் என்ற தேமுதிகவின் நிபந்தனையால் கூட்டணி அமைக்க முடியாமல் திமுக தவித்து வருகிறது.

தமிழக சட்டசபை தேர்தல் யூகிக்க முடியாத நிலையில் உள்ளது  : கிருஷ்ணசாமி புதிய தமிழகம்

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு கோரி சென்னையில் உள்ள இலங்கைத் தூதரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

மின்சாரம் தாக்கி பலியான 20 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: ஜெயலலிதா

வருகிற சட்டசபை பொதுத்தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும் : பண்ருட்டி ராமச்சந்திரன்.

Post a Comment

Powered by Blogger.