Halloween party ideas 2015
.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் புலம்பெயர் விவகாரங்களுக்கான அமைச்சகத்தினால் ஒருங்கு செய்யப்பட்டிருந்த கோடைகால விளையாட்டு விழா லண்டனில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

செப்ரெம்பர் 9ம் நாளன்று இடம்பெற்றிருந்த இந்நிகழ்வில் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகள போட்டிகள் மற்றும் அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

ஆடுகள வீரர்களையும், அரகாற்றுகர்களையும் உற்சாகமூட்டும் வகையில் பரிசில்கள் வழங்கப்பட்டு மதிப்பளிக்கபட்டிருந்ததோடு, நல்வாய்ப்பு சீட்டுமம் குலுக்கப்பட்டது. 

தமிழீழத் தாயகத்தின் நினைவுகளை மீட்கும் வகையில் உணவுகள் பரிமாறப்பட்டிருந்தது.

தொடக்க நிகழ்வாக தமிழீழத் தேசியக் கொடியினை நா. தமிழீழ அரசாங்கத்தின் தாயக அபிவிரித்தி அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் ஏற்றி வைத்திருக்க, பிரித்தானிய தேசியக் கொடியினை நா.தமிழீழ அரசாங்கத்தின் அவை உறுப்பினரும் செயல்வீரருமாகிய திருக்குமரன் அவர்கள் ஏற்றி வைத்தார்.

நிறைவில் நன்றியுரையினை வழங்கிய புலம்பெயர் விவகார அமைச்சின் பிரித்தானியாவுக்கான செயலர் நீதிராஜ் அவர்கள், இந்நிகழ்வு சிறப்புடன் இடம்பெற ஒத்துழைத்த அனைவரும் நன்றியினைத் தெரிவித்திருந்தார்.

நாதம் ஊடகசேவை
 
 

Post a Comment

Powered by Blogger.