Halloween party ideas 2015
.

சாலையில் காரில் சென்று கொண்டிருக்கும் நடிகர் அஜித்தை அவரது ரசிகர்கள் பைக்கில் சேஸ் பண்ணி சென்று தல தல என்று கூச்சலிட்டுள்ளனர். ஆனால், அவர்கள் யாரையும் கண்டுகொள்ளதாபடி அஜித் தனது மொபைலை எடுத்து பேச ஆரம்பித்திருக்கிறார்.

இதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் வேறு வழியின்றி சிக்னலில் நின்ற அவர் கார் அருகில் சென்று புகைப்படங்களை மட்டும் எடுத்துள்ளனர்.
இதை சும்மா விடுவார்களா விஜய் ரசிகர்கள்? இந்த வீடியோவை இணையத்தில் போட்டு தனது ரசிகர்களை மதிக்காத அஜித்… நடிகர் அஜித்தின் உண்மை முகம்.. போன்ற தலைப்புகளில் பரப்பி வருகின்றனர்.

இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது… ஆனால் பிரபலமாக இருப்பவர்கள் அனுபவித்துவரும் பிரச்சனையையே அஜித்தும் சந்தித்துள்ளார். இப்படி எத்தனை பேருக்கு அவர் கையசைத்துக் கொண்டே வரமுடியும், அவருக்கும் தனிமனித சுதந்திரம் தேவை தானே ஒரு வேலை அவர் காரை நிறுத்தி ரசிகர்களுடன் பேசிவிட்டு சென்றிருந்தால் நிச்சயம் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அஜித் செய்தது தான் சரி என்று பொதுவானவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். என்றுதான் முடிவுக்கு வருமோ அஜித் – விஜய் ரசிகர்கள் சண்டை?

Post a Comment

Powered by Blogger.