Halloween party ideas 2015
.

இறந்ததாக அடக்கம் செய்யப்பட்ட முதியவர் திடீரென இரவில் வீட்டுக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவில் விழுப்புரம் மாவட்டம் சமுத்திரகுளம் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி கலியன்(70).

இவருக்கு சண்முகம், முருகன், காத்தவராயன் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். கடந்த 3 ஆண்டுக்கு முன்னர் வீட்டில் மகன்களுடன் சண்டை போட்டுக்கொண்டு கலியன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

கலியனை மகன்கள் எங்கு தேடியும் கிடைக்காததால் அப்பகுதி பொலிசிடம் புகார் செய்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இருப்பதாக காவல்நிலையத்திற்கு தகவல் வந்தது.

இந்நிலையில் தகவலறிந்த பொலிசார் கலியன் மகன்களை அழைத்து சென்று அங்கிருந்த சடலத்தை காண்பித்த போது ஓரளவிற்கு கலியன் போல் தெரிந்ததால் அந்த சடலத்தை வாங்கி வந்து அடக்கம் செய்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் இறந்ததாக கருதப்பட்ட கலியன் திடீரென தனது வீட்டிற்கு வந்துள்ளார். இவரை பார்த்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் அலறி அடித்து ஓட ஆரம்பித்தனர்.

பின்னர் மெல்ல வந்து பார்த்த போது இறந்ததாக கருதப்பட்ட கலியன் உயிரோடு வந்ததை கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

கடந்த 3 ஆண்டுக்கு முன் வீட்டில் சண்டை போட்டுக் கொண்டு சென்ற கலியன் ஒரு ஆசிரமத்தில் இருந்ததாகவும், தற்போது மகன்களை காண வந்ததாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து அடக்கம் செய்யப்பட்டவர் யார் என பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
 
- See more at: http://www.manithan.com/news/20150702115778#sthash.xKAJbThl.dpuf

Post a Comment

Powered by Blogger.