Halloween party ideas 2015
.

கேரள மாநிலம் நெய்யாற்றின் கரையில் சாந்திகிரி ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமம் சார்பில் இயற்கை வளத்தை பாதுகாக்க மரம் வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

வீட்டுக்கு ஒரு மரக்கன்று வழங்கும் இந்த திட்டத்தின் தொடக்கவிழா சாந்திகிரி ஆசிரமத்தில் நடைபெற்றது. ஆசிரம தலைவர் சுவாமி குரு ரத்னானந்தா தலைமை தாங்கினார்.

பிரபல மலையாள நடிகர் மம்முட்டி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் இலவச மரக்கன்றுகளை ஆசிரமத்திற்கு வந்த பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கினார்.

விழாவில் மம்முட்டி பேசும்போது கூறியதாவது:– வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பது என்பது நமது கடமை. மரங்களை வளர்த்து இயற்கையை நாம் பாதுகாக்கவேண்டும். தற்போது காடுகள் அழிந்துவரும் சூழ்நிலையில் வீட்டுக்கு ஒரு மரம் வளர்த்து அதை நாம் பேண வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Post a Comment

Powered by Blogger.