Halloween party ideas 2015
.

மணிரத்னம் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘ஓகே கண்மணி’ படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்படத்தை தொடர்ந்து மணிரத்னம் தனது அடுத்தப் படத்திற்கான பணிகளில் களமிறங்கத் தொடங்கிவிட்டார்.

இவர், இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்களும் ஆர்வம் தெரிவித்து வந்த நிலையில், தற்போது அந்த படத்தில் நடிகர் கார்த்தி நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மணிரத்னம் இயக்கும் படத்தில் கார்த்தி நடிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டாலும், இன்னும் அதற்கான ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திடாமலே உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் மணிரத்னமும் கார்த்தியும் நேரில் சந்தித்து இந்த கதையை பற்றி விவாதித்தாகவும் கூறப்படுகிறது. இது உறுதியானல் படப்பிடிப்பை செப்டம்பர் மாதத்தில் படப்பிடிப்பை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்தி, ஏற்கெனவே மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘ஆயுத எழுத்து’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். பின்னர், பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகராக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Powered by Blogger.