Halloween party ideas 2015
.

Selfie மோகம் அதிகரித்துள்ள இந்தக் காலக்கட்டத்தில், தங்களைத் தாங்களே படம் எடுத்துப் போடும் சுய ரசனையாக ஆரம்பித்த இது, நாளடைவில் ஒரு ட்ரெண்டாக மாறி நாளாந்த கடமைகளில் ஒன்றாக மாறியிருக்கிறது.

போகும் வரும் இடங்களில் செல்பி எடுத்த காலம் போய், தங்களுக்குப் பிடித்தவர்கள், பிரபலங்கள், நட்சத்திரங்கள் ஆகியோருடன் எடுத்து வருகின்றனர்.

தற்போது சவுதி அரேபியாவையும், அரபுலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதத்தில் இறந்துபோன தன்னுடைய தாத்தாவின் சடலத்துடன் செல்பி எடுத்து முகநூலில் பதிவேற்றிள்ளார் பதின்மவயது சிறுவன் ஒருவன்.

சவுதி அரோபியாவின் மதீனாவில் உள்ள வைத்தியசாலையில் இது நடந்திருக்கிறது. ஜோன் ஒசாமா என்ற இந்த சிறுவன் Good Bye, Grandfather என்பதை அரபு மொழியில் பதிந்து இந்த செல்பியை தரவேற்றியுள்ளான்.

எனினும் இறந்துபோனவராகக் கருதப்படும் முதியவர் வாய் திறந்து கண்களும் முற்றாக மூடாமல் தென்படுகிறார்.



உடனடியாகவே கண்டனங்கள் எழுந்துள்ளதோடு, இறுக்கமான சட்டங்கள் கொண்ட சவுதியில் இந்த சிறுவனைத் தண்டிக்க கேட்டு கோரிக்கைகளும் கிளம்பியுள்ளன.

இதனைப் பின்பற்றி இன்னும் எத்தனை பேர் இப்படியான சடலங்களுடன் செல்பி எடுக்க கிளம்பப் போகிறார்களோ?...

Post a Comment

Powered by Blogger.