Halloween party ideas 2015
.

தமிழ் சினிமாவில் 80களில் கமல், ரஜினி போன்ற பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்த மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் டிஸ்கோ சாந்தி. இவரின் நடிப்பை விட குத்தாட்ட நடனத்தில் பிரபலமானார்.

இவர் தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை திருமணம் செய்து சினிமாவுக்கு முழுக்கு போட்டார். கடந்த வருடம் எதிர்பாராத விதமாக ஸ்ரீ ஹரி கேன்சரால் மரணமடைந்தார்.

டிஸ்கோ சாந்திக்கு 2 குழந்தைகள். கணவர் இறந்த சோகத்திலிருந்து கொஞ்ச கொஞ்சமாக வெளியே வந்து அவர் விட்டு சென்ற உதவும் பணியை தற்போது தொடர்ந்து வருகிறார்.

ஸ்ரீ ஹரி வள்ளல் பரம்பரை சேர்ந்தவர், அதுவும் ஏழைகளுக்கு பல உதவிகளை செய்து வந்தார். தன்னுடைய நிலத்தில் பயிரிடப்படும் நெல்களை சாகுபடி செய்து தன்னுடைய கிராமத்தில் வாழும் ஏழை மக்களுக்கு கொடுத்து வந்தார்.

அவர் விட்டு சென்ற இந்த பணியை சாந்தியும் தொடர்கிறாராம். இதனால் அந்த கிராமமே டிஸ்கோ சாந்தியை கையெடுத்து கும்பிட்டு வருகிறது.

Post a Comment

Powered by Blogger.