Halloween party ideas 2015
.

விஜய்யை த் தொடர்ந்து விஷாலும் படக்குழுவில் பணிபுரிந்தவர்களுக்கு தங்க நாணயம் கொடுத்துள்ளார். விஜய் தனது ’புலி’ படப்பிடிப்பின் போது புது வருடநாளில் மொத்த படக்குழுவுக்கும் தங்க நாணயங்களைக் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

அதே பாணியில் தற்போது விஷாலும் தனது ‘பாயும் புலி’ படப்பிடிப்பில் பணியாற்றிய அனைவருக்கும் தங்க நாணயங்களை பரிசளித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். பல சந்திப்பில் விஜய்யின் ரசிகன் நான் என விஷால் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. சுசீந்திரன் இயக்கத்தில் விஷால், காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பாயும் புலி’.

இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் நேற்று நிறைவடைந்துள்ளன. இதை முன்னிட்டு விஷால் அனைவருக்கும் தங்க நாணயங்கள் என 300 நாணயங்களை கொடுத்துள்ளார். ஆக்‌ஷன் கதைக்களமாக உருவாகியுள்ள இப்படம் மறைந்த சப் இன்ஸ்பெக்டர் ஆல்வின் சுதனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது.

ஒரு ஹீரோ மற்ற ஹீரோ செய்யும் நல்ல விஷயங்களை தொடரும் பழக்கம் தற்போது தமிழ் சினிமாவில் அதிகம் பின்பற்ரறப் படுகிறது. அஜித் பாணியில் விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் படக்குழுவுக்கு பிரியாணி போட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த தங்க நாணய பழக்கம் ஆரம்பித்துள்ளது சினிமா உலகில் இது அரோக்கியமான விஷயமே.

Post a Comment

Powered by Blogger.