Halloween party ideas 2015
.

அக்ஷய் குமார், விபுல் ஷா கூட்டணியின் நமஸ்தே லண்டன் லாபம் பெற்றுத் தந்த படம். அப்போதே அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேசி முடிவு செய்திருந்தனர்.

அடுத்த வருட தொடக்கத்தில் நமஸ்தே லண்டனின் இரண்டாம் பாகம், நமஸ்தே இங்க்லாண்ட் தொடங்கப்படுகிறது.அக்ஷய் குமார் தயாரித்து நடிக்கும் இந்தப் படம், ஒரு உண்மைக் கதை. அதுவும் காதல் கதை. பஞ்சாப் மற்றும் லண்டனில் கதை நடக்கிறது. அடுத்த வருடம் ஜனவரியில் படத்தை தொடங்குவதாக திட்டம்.

இன்னும் தொடங்கப்படாத இந்தப் படத்தின் சர்வதேச உரிமையை 75 கோடிகளுக்கு முன்னணி மியூஸிக் நிறுவனம் ஒன்று வாங்கியுள்ளது. படத்தின் பட்ஜெட் 25 கோடியானாலும் ஐம்பது கோடிகள் அக்ஷய் குமாரின் கல்லாவுக்கு வந்துவிடும்.

Post a Comment

Powered by Blogger.