Halloween party ideas 2015
.

கே.எஃப்.சி என்பது கென்டக்கி பிரைடு சிக்கன் ஆகும். இங்கு சிக்கன் பர்கர் உள்ளிட்டவற்றை வகைவகையாக விற்பார்கள். இங்கு சென்று சாப்பிடுவது தான் தற்போது இந்தியாவில் ட்ரென்டு ஆகி வருவது. இதில் அடிக்கடி புகார்கள் வருகிறது. சில மாதங்களுக்கு முன் இந்த சிக்கனில் புழுக்கள் இருந்ததாக புகார் வந்தது.




தற்போது சிக்கனுக்கு பதில் எலியை வறுத்து கொடுத்துள்ளார்கள் என்று ஒரு புகார் வந்துள்ளது. அமெரிக்காவில் ஒருவர் கே.எஃப்.சி சென்று பிரைடு சிக்கன் விங்ஸ் கேட்டுள்ளார். அவர்களும் கொடுத்துள்ளார்கள். அதனை சாப்பிட தொடங்கியவருக்கு ஒரு மாதிரியாக இருந்துள்ளது. அதனை உற்று பார்த்த போது அது வாளுடன் கூடிய எலியை போன்று உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இது குறித்து நிறுவனத்திடம் புகார் அளித்தால் அவர்கள் சரியான பதிலை தரவில்லை. அதனால் இந்த போட்டோவை பேஸ்புக்கில் பதிவு செய்து உலகம் முழுவதும் பரப்பினார். அது தற்போது ட்ரெண்டிங்கிற்கு வந்துவிட்டது.  சிலர் இது சிக்கன் தான் என்கிறார்கள். வாலை போன்று இருப்பது சிக்கனின் தோலாக இருக்கலாம் என கூறுகிறார்கள். இருந்தாலும் அனைவரும் ஜாக்கிரதையாக இருங்கள்.

Post a Comment

Powered by Blogger.