Halloween party ideas 2015
.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிமுக்கிய அரசியல் தத்துவ ஆசிரியரும்,தமிழீழத் தேசியத்தலைவாரால் தனக்கான விழக்க வல்லுனராக தெரிவுசெய்யப்பட்டவரும், தமிழினத்தின் அறிவுக் களஞ்சியமுமான மதிப்பிற்குரிய தேசத்தின் குரல் “அன்ரன் பாலசிங்கம்” அவர்களின் வாழ்க்கைத் துணைக்காக வந்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் வாழ்நாள்வரை துணையாகவிருந்த ஒரு வெள்ளைப் புலியாக தன்னை மாற்றிய ஒரு அற்புத வடிவமே திருமதி:அடேல் பாலசிங்கம்.

இவர் விடுதலைப் புலிகளின் பெண் தத்துவ ஆசிரியர் என்றால்கூட மிகையாகாது. இதற்கான காரணங்கள் மலையாக கிடக்கின்றன. இவரின் ஆரம்பம் என்பது கிட்டத்தட்ட விடுதலைப் புலிகளின் ஆரம்பமென்றே கொள்ளமுடியும். மேலும் தேசத்தின் குரலின் உள்ளார்ந்த குரலாக மறைந்து இவரின் குரல் தேசத்தின் குரலூடாக ஒலித்துவந்ததை அனைத்து ஈழத்தமிழர்களும் நன்கு அறிவர்.இன்னும் விடுதலைப் புலிகளின் அடிப்படையில் இருந்து முடிவுவரையும்,தமிழீழ மக்களின் துன்ப துயரங்களையும் நன்கு அறிந்துவைத்துள்ள ஒரு பலமான சாட்ச்சி என்றும் கொள்ளமுடியும்.இன்னும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளீர் படைப்பிரிவின் ஆரம்பகால சூட்டுப்பயிற்சி ஆசிரியராகவும், அவர்களுக்கான மதியுரைஞ்ஞராகவும் மற்றும் விடுதலைப் புலிகளின் ஒரே ஒரு வெள்ளைப் பெண் புலியாகவும் இவரே இருந்துவந்துள்ளார்.

அப்பேற்பட்ட வெள்ளைப் பெண்புலியினை 17-05-2009ற்குப் பின்னர் இயங்குநிலையற்ற சூழலுக்குள் சிலர் முடக்கியிருப்பதாக நம்பகரமான தகவல்கள் எமக்குக் கிடைத்துள்ளன.

அதாவது 17-05-2009ற்கு பின்னர் விடுதலைப் புலிகளின் சார்பாக ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் கருத்தினை அரசியல் சாணக்கியம் நிறைந்த இந்தப் புலிப்பெண் ஊடாக இதுவரை எந்தவிதமான கருத்துக்களும் வெளிவரவில்லை என்பது எம் அனைவரினதும் பார்வையில் சந்தேகத்தை வலுப்படுத்தியிருந்தது.எமது ஈழத்தமிழர்கள் இவரின் வாயிலாக சில செய்திகளைக் கேட்டாலே புத்துணர்ச்சி அடைவார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

மேலும் அதாவது 17-05-2009ற்கு பிற்பாடு விடுதலைப் புலிகளின் சர்வதேச அரசியல் செயற்பாடுகள் வேகமாக முடக்கமடைந்து வருவதற்கு விடுதலைப் புலிகளின் பெயரால் இயங்கிவருகின்ற,கடந்தகாலங்களில் KP பத்மநாதனின் தலைமையில் இயங்கிவந்த விடுதலைப் புலிகள் என்று மறைந்து இயங்குகின்ற,தற்போதுவரை KPபத்மநாதனின் தொடர்புடன் இருந்துவருகின்ற சில முக்கிய நபர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே திருமதி அடேல் பாலசிங்கம் அவர்கள் முடக்கப்பட்டிருப்பதாக நம்பகரமான தகவல்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

மேலும் திருமதி அடேல் பாலசிங்கம் அவர்கள் ஒரு வேற்றினத்தவர் என்ற அடிப்படையிலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப்போராட்டத்தின் முடிவிற்கு பிற்பாடும் வன்னித்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையிலும்,2009ற்கு முன்னர் இவருடன் தொடர்பினில் இருந்துவந்த தற்போது பிருத்தானியாவில் இருக்கின்ற சில முக்கிய KPயிற்கு நெருக்கமான பணப் புலிகளே இவருடைய செற்பாடுகளை முடக்கியிருப்பதை நாம் நன்கு அறிந்திருக்கின்றோம்.

இன்னும் திருமதி அடேல் பாலசிங்கம் ஒரு வேற்றினப் பெண்ணாகையால் எமது இனத்தில் தோன்றுகின்ற துரோகிகளை அவரால் இனங்காணமுடியாது என்ற இயல்பான சூழலினை இந்த நபர்கள் சாதகமாகப் பயன்படுத்தி அவருக்கு வன்னியிலிருந்து 2009ற்கு பின்னர் வருகைதந்த புலிகளைக்கூட அவர் சந்திப்பதற்கும் தவறான காரணங்களைக் காட்டி அதாவது இராணுவத்தினரின் உழவாழிகள் என்ற பொதுவான முன்னெச்சரிக்கை விடப்பட்டு அவரை முடக்கியிருப்பதாகவும் நாம் அறந்திருக்கின்றோம்.

மேலும் தற்போதைய காலகட்டத்தில் 2009ற்குப் பின்னர் வெளிநாடுகளுக்கு வருகைதந்துள்ள இறுதிவரை களங்கண்ட நிறையப் போராளிகள் பகிரங்கமாக செயற்பட்டுவரும் இன்றைய சூழ்நிலையில் களமுனைகளையோ அல்லது எதிரிக்கோ யாரென்றுகூடத்தெரியாத இவர்கள் ஏன் ஒளித்திருந்து செயல்ப்படவேண்டும் என்கிற பெரிய கேழ்விகளுக்கு இவர்களிடம் பதில் என்பது அறவே இல்லை என்பதுதான் உண்மை.

உண்மையில் 2009ற்கு பின்னரான சுமார் ஆறுவருடங்களில் இதுவரைக்கும் இந்த பதுங்கிவாழும் புலித்தோல் போர்த்திய சிங்கங்களால் எதையாவது மக்கள்முன் உருப்படியாக எடுத்துரைத்து எதிர்கால நகர்வுகள் தொடர்பாக தமது கருத்துக்களை முன்வைத்து ஒரு பலமான சூழ்நிலையை உருவாக்குவதற்கு எத்தனித்தார்களா என்றால் இல்லை என்பதே உண்மை.

மேலும் 17-05-2009துடன் விடுதலைப் புலிகளின் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதே அன்றி அவர்களின் அரசியல்போராட்டம் மௌனிக்கப்படவேண்டும் என்று யாரும் கூறிச்செல்லவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது.இங்குதான் பெரிய சதியொன்று நடைபெற்றுவருவதை நீங்கள் யாவரும் நன்கு விழங்கிக்கொள்ள வேண்டும்.
அதாவது ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து இயங்கிவந்த விடுதலைப் புலிகளின் கட்டமைப்பிற்கு என்ன நடந்தது? எமது தலைவரின் இறிதியான முடிவு என்பது வெளிநாடுகளில் இருந்துவந்த ஆதரவாளர்களின் ஒத்துழைப்புடனும் மேலும் சரணடைந்து அல்லது எதிரியிடம் அகப்பட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்கின்ற விடுதலைப் புலிகள் ஊடாகவும் ஒரு பலமான அரசியல் சூழ்நிலையை உருவாக்கி மீண்டும் இழக்கப்பட்ட எமது தாயகத்தை எதிரியிடம் இருந்து பறிக்கவேண்டும் என்ற உறுதியான முடிவின் பிரகாரமே தலைவர் அவர்கள் போரினை முடிவுக்குக் கொண்டுவந்ததை நீங்கள் யாவரும் நன்கறிவீர்கள்.

ஆனால் இங்கு என்ன நடக்கின்றது? இங்குதான் நன்கு திட்டமிட்ட சதியொன்று மௌனமாக புலிகளின் பெயரால் அமைதியாக அனைவரையும் சின்னா பின்னமாக சிதறடித்துவருகின்றது. எமது கண்ணுக்குத் தெரிந்த போராளிகளை துரோகிகளாக்கி கண்ணுக்குத் தெரியாத சில நபர்கள் பணத்திற்காக KPயின் ஏஜன்டுகளாக ஒவ்வொரு நாடுகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் 2009ற்கு முன்னர் KP பத்மநாதனால் கட்டிவளர்க்கப்பட்ட நிதிப் புலிகள்.(போலிகள்) KPயின் சரணடைதலின் பின்பு அவரால் தற்போதுவரை இரகசியமாக இந்த நபர்கள் கையாளப்பட்டு இவர்களுக்கான கொடுப்பனவுகளும் வளங்கப்பட்டு தற்போதுவரை முகம்தெரியாத போலிப் புலிகளாக இயக்கப்பட்டு வருகின்றார்கள் என்பதுமட்டும் உண்மை.

மேலும் தலைவரின் இறுதிநேரத் திட்டத்தினை எமது எதிரி முள்ளிவாய்க்காலின் முடிவினில் தெரிந்துதான் சரணடைந்த புலிகளை அன்று சுட்டுக்கொன்றிருந்தான். ஆனாலும் அனைவரையும் சிங்களப் படைகளால் கொல்லமுடியவில்லை.இதனால் தப்பிப்போகும் புலிகளை(வெளிநாடு)இயங்கவிடாதபடிக்கு KPயின் ஆதரவாளர்களால் தப்பிவரும் புலிகளுக்கு தந்திரமாக துரோகப்பட்டத்தினை வழங்கி தாங்கள்தான் உண்மையான புலிகள் என்று மறைந்திருந்து மக்களை குழப்பிவிட்டுள்ளார்கள்.

இதனால்தான் உலகத் தமிழ் மக்களின் மனங்கள் சுக்குநூறாகி அனைவரும் ஏனோ தானோ என்ற சூழலுக்குள் தள்ளப்பட்டு தற்போது மாவீரர் நாளை மட்டும் நினைவுகூருவதற்காக பாரபட்ச்சமின்றி அணிதிரண்டுவருவதை கடந்த ஆறு வருடங்களாக நீங்கள் அவதானித்திருப்பீர்கள். இதில் அதிர்ச்சிகரமான விடையம் என்னவெனில் இங்கு மாவீர் நாளைக்கூட நடத்துபவர்களும் KPயின் அடிவருடிகள்தான் என்ற உண்மையினை இதுவரை எவரும் அறிந்திருக்கமாட்டார்கள்.

இதற்கான அதாவது மாவீரர் நாளை ஏன் இவர்கள் முன்னின்று நட்துகின்றார்கள்? இதற்கான பதில் இதுதான் அதாவது மாவீரர் நாளில் திரட்டப்படும் பணங்களும் KPயின் கைகழுக்குச்சென்று அது சிங்கள அரசிற்கு செல்வதாகவே தற்போதுவரை எமக்குக்கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மாவீர் நாளை நடத்துவதனால் மறைந்திருந்து இயங்குகின்ற KPயின் ஆட்களை மக்கள் விடுதலைப் புலிகள் என்று உள்ளார்ந்தமாக சிந்தித்து அவர்களை பெரிதாக கணக்குப்போடுவார்கள் என்பதும் இந்த நபர்களுக்கு நன்கு தெரியும்.இன்னும் காலா காலமாக தாங்கள்தான் புலிகளென்றும்,தலைவர் வருவார் என்றும் அதுவரைக்கும் தாங்கள் பொறுமையாக இருப்பதாகவும் மக்களுக்கு காட்டி காலத்தைக் கடத்தி இன்னும் இரண்டு வருடங்களின் பிற்பாடு இயல்பாகவே மக்கள் நம்பிக்கையிழந்து விடுதலைப் புலிகளை வெறுப்பார்கள் என்ற தூரநோக்கோடுதான் இவர்களை சிங்கள அரசு KPஊடாக நகர்த்திவிட்டுள்ளதென்பதே உண்மை.

மேலும் இந்த தந்திரமான நகர்வுக்குள்தான் தற்போதுவரை திருமதி அடேல் பாலசிங்கமும் அகப்பட்டுள்ளார். இவருக்கு இம்மையும் தெரியாது மறுமையும் தெரியாதென்றே சொல்லமுடியும். இதேபோன்றுதான் 2009ற்கு பின்னர் வந்த புலிகளின் நிலைப்பாடும்.இதில் இன்னுமொரு விடையம் என்னவெனில் KPயின் தலைமையில் இருந்துவரும் இந்த விரல்விட்டு எண்ணக்கூடிய முக்கிய துரோகிகள் தவிர்ந்த ஏனைய அதாவது அவர்களால் செயற்படுத்தப்பட்டுவருகின்ற சாதாரண தொண்டர்களுக்கும் இவர்களுக்கும் எந்தவித நேரடித் தொடர்புகளும் இல்லை என்பதும் எமக்கு நன்கு தெரியும். இந்த புலித்தோல் போர்த்திய சிங்கங்களின் துரோகங்கள் இதுவரை யாருக்கும் தெரிந்திருக்கவில்லை என்பதும் இதற்கான காரணமாக இவர்கள் விடுதலைப் புலிகளின் கொள்கையோடு இயங்குவதாக காட்டுவதற்காக இலகுவான வழிமுறையாக மாவீரர் நாளினை நடத்தி அதனூடாக மக்களை கவர்ந்துவருவதாகவும் நாம் நன்கு அறிந்திருக்கின்றோம்.

மேலும் விடுதலைப் புலிகளின் வன்னி ராட்சியம் வலுவாக இருந்தபோது அவர்களால் உலகளாவிய அளவில் விடுதலைச் செயற்பாட்டிற்காக உருவாக்கிய ஆதரவாளர்களை வைத்தே இந்த KPயின் குழுவினர் தற்போதுவரை எல்லா நிகழ்ச்சிகளையும் நடத்திவருகின்றார்கள். இதனால் வெளிப்பார்வைக்கு இந்த மாபெரும் துரோகங்கள் சாதாரண மக்களுக்கு தெரிவதற்கு வாய்பே கிடையாது.இதில் குறிப்பாக புலம்பெயர் தமிழர்களுக்கு இந்த நயவஞ்சக நபர்களை இனங்காண்பதென்பது மிகவும் கடினம்.

மேலும் இன்றைய காலகட்டத்தில் உலகத்தமிழர்களால் உலகநாடுகளைநோக்கி இழக்கப்பட்ட எமது தாய்மண்ணை மீட்டுத்தரும்படி வேண்டி மக்களை அணிதிரட்டி பெரும் அரசியல் போராட்டங்களூடாக போராடவேண்டிய தேவைகளிருந்தும் சிங்களத்தின் திட்டமிட்ட சதிவலைக்குள் தாங்கள் சிக்கியது மட்டுமல்லாது எமது தேசியத் தலைவர் அவர்களின் இறுதிநேர மூலோபாயத்தையும் எதிரியோடு இணைந்து இயங்கவிடாது, வெளிநாடுகளுக்கு தப்பி வந்தவர்களையும் இயங்கவிடாது,இன்னும் நாடுகடந்த தமிழீழ அரசினைக்கூட இயங்கவிடாது இவர்கள்தான் தடுத்துவருவதையும் நாம் நன்கு அவதானித்து வருகின்றோம்.
மேலும் விடுதலைப் புலிகளுக்கான தற்போதைய இலக்கு என்பது உலகத்தமிழ் மக்களை அணிதிரட்டி உலகத்திடம் ஞாயம் கேட்டுப் பொராடவேண்டும் என்ற குறிக்கோளே அடிப்படையாக இருந்துவருகின்றது. இந்த அணிதிரட்டலை ஒரு சக்திமிக்க தலைமையொன்றுதான் பொறுப்பேற்கவேண்டிய தேவையும் கடப்பாடும் இருந்துவருகின்றது. இதற்கான முதன்மைத் தலைமையை உலகத்தமிழர்களால் அங்கீகரிக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசுமட்டுமே வகிக்கமுடியும். இன்னும் இதன் தலைவரும் பிரதமருமான திரு வி உருத்திரகுமார் அண்ணணை எமது தேசியத் தலைவரும் இனங்கண்டிருந்தார். ஆகவே விடுதலைப் புலிகளின்பால் இயங்கிவருகின்ற KPதலைமையிலான சிங்கங்களை நாம் விரைவினில் தோலுரித்து வெளிக்கொணர்வோம். அதுவரை உலகத்தமிழர்களாகிய நீங்கள் சற்று நிதானமாகச் சிந்தித்து நாம் இறுதிவரை சிந்திய குருதிகளுக்காகவும்,இழக்கப்பட்ட எமது உறவுகளுக்காகவும்,எம்மை நம்பி இறுதிவரை போரிட்டுமடிந்த போராளிகளுக்காகவும் எம்மை தயார்படுத்தி ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் தலைமைத்துவத்தின் கீழ் அணிதிரள உறுதியெடுத்துக்கொள்வோம்!
நன்றி
கார்முகிலன்
பொட்டுவின் சேனை
தமிழீழம்.

News Source: http://www.tamilsvoice.com/archives/46551


Post a Comment

Powered by Blogger.