Halloween party ideas 2015
.

ஜீவா, நயன்தாரா ஜோடியாக நடிக்கும் படம் திருநாள். ஏற்கனவே ஈ படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார்கள்.

இப்படத்தை கோதண்டபாணி பிலிம்ஸ் சார்பில் எம்.செந்தில் குமார் தயாரிக்கிறார். எம்.ராம்நாத் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு கும்பகோணத்திலும் அதை சுற்றி உள்ள பகுதிகளிலும் விறுவிறுப்பாக நடக்கிறது.

ஜீவா இப்படத்தில் முரட்டுத்தனமான கிராமத்து இளைஞனாக வருகிறார். நயன்தாராவும் கிராமத்து பெண் கேரக்டரில் நடிக்கிறார்.
காதல், காமெடியுடன் கூடிய ஆக்ஷன் படமாக தயாராகிறது. படப்பிடிப்புக்காக பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த அரங்குக்குள் தினமும் ஆயிரக்கணக்கான துணை நடிகர்களை வைத்து படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்குகின்றனர்.

இசை: ஸ்ரீ, ஒளிப்பதிவு: மகேஷ் முத்துசாமி, எடிட்டிங்: வி.டி.விஜயன், ஸ்டன்ட்: சூப்பர் சுப்பராயன், நடனம்: பாபி, பாலகுமார், ரேவதி, தினா.

Post a Comment

Powered by Blogger.