Halloween party ideas 2015
.

தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி, பாகஸ் ஆபிஸை எப்போது குறி தவறாமல் அடிக்கு கில்லி தான் இளைய தளபதி விஜய். எத்தனையோ நடிகர்கள் சினிமா பின்னணியில் இருந்து வந்து தோல்வி தான் அடைந்துள்ளார்கள்.

இதில் விதி விலக்காக வந்து ஒரு சிலரில் சாதாரண பக்கத்து வீட்டு பையன் போல் தோற்றம் கொண்டு சினிமாவில் களம் இறங்கியவர் தான் விஜய், பல பத்திரிக்கையாளர்களால் ஆரம்ப காலத்தில் கிண்டலுக்கு ஆளானார். தன் விடா முயற்சியால பேசியவர்கள் வாயை எல்லாம் அடைத்து தற்போது இவரை கிண்டல் செய்த பத்திரிக்கையின் அட்டை படத்திற்கே இவர் தான் சிறப்பு சேர்க்கின்றார்.

பூவே உனக்காக படத்தின் மூலம் தன் வெற்றி பவனியை ஆரம்பித்த விஜய் வரிசையாக பல காதல் படங்களை மட்டும் நடித்து வந்து, திருமலையில் ஒரு ஆக்‌ஷன் அவதாரம் எடுத்தார். இப்படத்திற்கு பிறகு விஜய்யின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

இவரின் படங்கள் வருகிறது என்றாலே மற்ற நடிகர்கள் படம் கொஞ்சம் அஞ்சும் நிலை வந்தது. இதை அவர் ஸ்டைலில் கூற வேண்டும் என்றால்(நம்ம தியேட்டர்ல உன் படம் ஓடுச்சு ஸ்கீரின் கிழிஞ்சுரும்). இப்படி தொடர் வெற்றிகளை கொடுத்த வந்த விஜய் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறகு பாக்ஸ் ஆபிஸில் செல்லப்பிள்ளையானர்.

இவர் நடிப்பில் வெளிவந்த திருப்பாச்சி, சிவகாசி, மதுர, போக்கிரி என தொடர் சரவெடி தான். ஆனால், திடிரென்று அவருடைய திரைப்பயணத்தில் ஏற்பட்ட தேக்கம், தொடர் தோல்வி என பல சந்தித்தும் தன் கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆதரவால் தோட்டாவை சரியாக வைத்து துப்பாக்கியை கையில் எடுத்தார். படம் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி தமிழ் சினிமாவில் அதிக வசூலில் இரண்டாம் இடத்தை பிடித்தது.

இதையும் தளபதி ஸ்டைலில் கூற வேண்டும் என்றால்(வாழ்க்கை ஒரு வட்டம்). இதேபோல் விஜய்க்கு உலகம் எங்கும் பல குட்டிஸ் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர்களை எல்லாம் கவர்ந்தது விஜய்யின் நடனம் தான். தென்னிந்தியாவிலேயே இவரின் நடத்திற்கு இவர் மட்டுமே சவால். அதேபோல் தமிழ்சினிமாவின் இசையமைப்பாளர்களில் கிட்டத்தட்ட 14 பேர் இசையில் பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் எல்லை திரையோடு முடியவில்லை, இவரை தலைவா சீக்கிரம் வாருங்கள் என மேடையை நோக்கி பலர் அழைத்தாலும், அவர் மெல்லிய புன்னைகையுடன் தன் புலி பாய்ச்சலில் மட்டும் தான் கவனமாக உள்ளார். கண்டிப்பாக இந்த புலி திரையை தாண்டி ரசிகர்கள் நினைக்கும் சிம்மசானத்தில் பாயும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்த வசூல் மன்னனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவதில் திரை உலகம் மகிழ்ச்சியடைகிறது.

Post a Comment

Powered by Blogger.