Halloween party ideas 2015
.

இதுவரை அனுப்பிய மெயிலை திரும்ப பெற நினைத்தால், அது முடியாததாக இருந்து வந்தது. இந்நிலையில் மின்னஞ்சல் தளத்தில் ஜாம்பவானாக உள்ள ஜி-மெயில் அனுப்பிய மெயிலை திரும்பு பெறும் unsend ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் தவறுதலாக அனுப்பப்பட்ட மெயிலை திரும்ப அழைத்துக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இனி எப்படி unsend செய்வது என்பதை பார்ப்போமா. முதலில் ஜி மெயிலுக்குள் செல்லவேண்டும். பின்னர் Settings ஆப்ஷனை கிளிக் செய்யவேண்டும். அதற்குள் உள்ள Laps ஆப்ஷனை கிளிக் செய்யவேண்டும. அதற்குள் சென்றவுடன் Undo Send என்ற பகுதிக்குள் செல்லவும். அதில் Undo வசதியை Enable செய்யவும். பின்னர் Save Changes பட்டனை க்ளிக் செய்யவும்.

அதன் பின் நீங்கள் யாருக்காவது மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு இமேஜ் தானாக தோன்றும். அதில் UnSend என்ற ஆப்ஷன் 30 செகண்டுகள் டிஸ்பிளே ஆகும். ஒரு வேளை நீங்கள் அனுப்பிய மெயிலை திரும்பப்பெற விரும்பினால் Unsend ஆப்ஷனை கிளிக் செய்து திரும்ப பெறலாம்.

Post a Comment

Powered by Blogger.