Halloween party ideas 2015
.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு கடலை மிட்டாய் உள்ளிட்ட பொருட்கள் வாங்கியதில் கோடிக் கணக்கில் ஊழல் செய்ததாக அம்மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் பங்கஜா முண்டே மீது ஊழல் தடுப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பங்கஜா முண்டே, மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பழங்குடியினர் மாணவர்களுக்கு வாட்டர் பில்டர், புத்தகங்கள், தரைவிரிப்புகள் உள்ளிட்ட பொருட்கள் கொள்முதல் செய்யவும், மாணவர்களுக்கு கடலை மிட்டாய் வாங்கிடவும் 206 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

3 லட்சம் ரூபாய்க்கு மேல் பொருட்களை வாங்கும்போது டெண்டர் கோர வேண்டும் என்ற விதியை மீறி 24 ஒப்பந்தங்களுக்கு ஒரே நாளில் பங்கஜா முண்டே அனுமதி அளித்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மேலும் பங்கஜா முண்டே மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி அம்மாநில ஊழல் தடுப்பு பிரிவில் புகார் அளித்துள்ளது.

பங்கஜா முண்டே மீதான ஊழல் புகார் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் சாவந்த், பங்கஜா முண்டேவின் அமைச்சகம் மொத்தமாகவும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது. அந்த அமைச்சகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் இதில் தொடர்பு உள்ளது. எந்த விதிகளும் பின்பற்றப்பட்டதாக தெரியவில்லை. எனவே இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். மகாராஷ்டிர மாநில அரசு வகுத்த விதிகளை மீறி 24 ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

இந்தநிலையில் இந்த புகார் குறித்து தனியார் டிவிக்கு பேட்டியளித்த பங்கஜ் முண்டே, டெண்டர் விட்டதில் எந்த விதிமீறலும் இல்லை. ஏப்ரல் 7ம் தேதி நடந்த டெண்டரை ரத்து செய்து விட்டு மீண்டும் ஏலம் விடுவது என்ற பேச்சுக்கு இடமில்லை. எந்த ஊழலும், முறைகேடும் நடைபெறவில்லை. தேவையில்லாமல் எதிர்க்கட்சிகள் என் மீது குற்றம் சாட்டுகின்றன. அனைத்தும் விதிமுறைப்படி நடந்தது. அரசின் கட்டணப்படி தான் கான்டிராக்டர்களிடம் டெண்டர் விடப்பட்டது. என் மீது தவறு இல்லை. எந்த விசாரணைக்கும் தயார். குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் முறைகேடு செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. பாஜக பதவியேற்று ஓராண்டு ஆகிறது. முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் உள்ளார். கடந்த ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மகள்தான் பங்கஜா முண்டே. - நக்கீரன் இணையம்.

Post a Comment

Powered by Blogger.