Halloween party ideas 2015
.

‘சண்டகோழி 2’ பாகம் ஸ்கிரிப்ட் தயாரித்துள்ள இயக்குனர் லிங்குசாமி அதற்கு கமர்ஷியல் மெருகூட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். முதல்பாகத்தில் ஹீரோவாக நடித்த விஷால் இதிலும் ஹீரோவாக தொடர்கிறார்.

ஹீரோயினாக நடித்த மீரா ஜாஸ்மின் 2ம் பாகத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். தற்போது ஹீரோயின் தேடும் படலம் நடக்கிறது. விஷால் படங்களுக்கு ஆந்திராவிலும் வரவேற்பு இருப்பதால் இரு மொழிக்கும் அறிமுகமான ஹீரோயின்களை தேர்வு செய்யும் ஆலோசனையும் நடந்து வருகிறது.

இதற்கிடையில் விஷால் ஜோடியாக நடிக்க சமந்தா, தமன்னா இருவரிடமும் கால்ஷீட் கேட்டிருப்பதாக தகவல் பரவியது. ஆனால் அவர்களிடம் கால்ஷீட் கேட்கவில்லை என்று விஷால் கூறி இருக்கிறார். இதுபற்றி அவர் இணைய தள பக்கத்தில்,’சண்ட கோழி 2ம் பாகத்தில் நடிக்க தமன்னாவையோ, சமந்தாவையோ கால்ஷீட் கேட்டு அணுகவில்லை. ஸ்கிரிப்ட்டுக்கு பைனல் டச் கொடுக்கும் பணி நடக்கிறது’ என குறிப்பிட்டிருக்கிறார்.

Post a Comment

Powered by Blogger.