Halloween party ideas 2015
.

மலையாள சினிமாவில் பிரபலமான இயக்குனர் சித்திக். இவருடைய படங்களை மலையாள சினிமா எதிர்ப்பார்க்கிறதோ? இல்லையோ? மற்ற மொழிகளில் உள்ள நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.

ஏனென்றால் இவருடைய படங்களை ரீமேக் செய்வதில் அவ்வளவு ஆர்வம். கடந்த ஏப்ரலில் சித்திக் இயக்கத்தில் மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் வெளியான படம் பாஸ்கர் தி ராஸ்கல்.

இந்த படத்தின் ரீமேக் வியாபாராம் சூடு பிடிக்க, அக்ஷய் குமார், வெங்கடேஷ் ஏற்கெனவே அப்ளிகேஷன் போட்டுவிட்டு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ரீமேக்கையும் தானே இயக்கும் முடிவில் இருக்கும் சித்திக், தமிழில் ரஜினி அல்லது அஜித் நடித்தால் தான் சரியானதாக இருக்கும் என்று கூறியுள்ளாராம்.

Post a Comment

Powered by Blogger.