Halloween party ideas 2015
.

அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக சுருதிஹாசனும் தங்கையாக லட்சுமிமேனன் நடித்து வருகிறார்கள். மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் கபீர் சிங் நடித்து வந்தார்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் அஜித்-லட்சுமி மேனன் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினார்கள். பின்னர் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் அஜித்-கபீர் சிங் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வந்தார்கள். இதில் ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் கபீர் சிங்கின் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு சென்னை பின்னி மில் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் படமாக்கி வந்தார்கள். தற்போது இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது.

இதற்காக சென்னையில் நீண்ட நாட்களாக முகாமிட்டிருந்த கபீர் சிங், தற்போது சென்னைக்கு விடை கொடுத்துவிட்டு மும்பை செல்கிறார். இதனை தன்னுடைய சமூக வலைதளத்தில் ‘பை பை சென்னை’ என்று மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார்.

Post a Comment

Powered by Blogger.