Halloween party ideas 2015
.

ஜேர்மனியில் மனைவி விவாகரத்து கோரியதால் அவருக்கு சேரவேண்டிய சொத்துக்களை அவரது கணவர், சரி பாதியாக வெட்டி கொடுத்ததாக இணையத்தில் பரவிய வீடியோ பொய்யானது என தற்போது நிரூபனம் ஆகியுள்ளது.

ஜேர்மனியை சேர்ந்த மார்ட்டின் என்ற நபர்,தனது மனைவி லாரா, பக்கத்து வீட்டுக்காரனுடன் கள்ள தொடர்பு வைத்திருந்த காரணத்தால் அவருடன் விவகாரத்து செய்துகொள்வதாக கூறினார்.

இதையடுத்து மனைவிக்கு சேரவேண்டிய சொத்தை சரி பாதியாக பிரித்து அளிக்க வேண்டும் என்பதால், வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் சரி பாதியாக வெட்டி அவருக்கு வழங்கினார்.

கார், அப்பிள் போன், அப்பிள் லேப்டாப், சைக்கிள், தொலைக்காட்சி உள்ளிட்ட பொருட்களை வெட்டுவது போல வீடியோ எடுத்து யூடியூப்பில் பதிவேற்றி இருந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்ட இந்த படங்கள் உலகில் உள்ள அத்தனை தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் வெளியாகி மார்ட்டின் என்ற அந்த நபர் ஒரே நாளில் பிரபலம் ஆனார்.

ஆனால், இந்த சம்பவங்கள் அனைத்தும் கட்டுக்கதைகள் என்பது இந்த வீடியோவை எடுத்த நிறுவனமே தற்போது ஒப்புக்கொண்டுள்ளது.

உண்மையில் மார்ட்டின் என்ற நபரும் இல்லை. அவருக்கு லாரா என்ற மனைவியும் இல்லை என ஜேர்மனியை சேர்ந்த Deutsche Anwaltsauskunft என்ற சட்ட பத்திரிகை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, அந்த ஒன்லைன் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், தற்போதைய காலத்தில் விளம்பரங்களை தயாரித்து அதனை மக்கள் மத்தியில் பிரபலம் அடைய செய்வதென்பது பெரிய சவாலாக உள்ளது.


இதனால், விவாகரத்து தொடர்பாக உலக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஜேர்மனி நாட்டு சட்ட திட்டங்களை வெளி உலகிற்கு காட்டவும் ஒரு நூதன விளம்பரத்தை தயாரித்தோம்.

அந்த விளம்பரம் தான் மார்ட்டின் என்ற நபர் வீட்டு பொருட்களை பாதியாக வெட்டுவது போன்ற வீடியோ காட்சி என விளக்கம் அளித்துள்ளது.

நபர் வெட்டுவது உண்மையான பொருட்கள் தான் என்றாலும், அதனை சுற்றி சொல்லப்பட்ட விவாகரத்து கதை முற்றிலும் கற்பனையானது என்பது தெரியவந்துள்ளது. தற்போது ஈபே இணையத்தளத்தில் பாதியாக அறுக்கப்பட்ட கார் சுமார் 1,000 யூரோக்கள் வரை கேட்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய பொருட்களையும் விற்று அதனால் வரும் நிதியை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Post a Comment

Powered by Blogger.