Halloween party ideas 2015
.

விஜய் ‘புலி’ படத்தை முடித்துள்ளார். இப்படத்தின் டப்பிங், ரீரிக்கார்டிங், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. இதில் நாயகிகளாக சுருதிஹாசன், ஹன்சிகா நடித்துள்ளனர். முன்னாள் கதாநாயகி ஸ்ரீதேவியும் முக்கிய கேரக்டரில் வருகிறார். சிம்புதேவன் இயக்கியுள்ளார்.

இதன் டிரெய்லர் சமீபத்தில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இப்படத்தை தொடர்ந்து அட்லி இயக்கும் புது படத்தில் விஜய் நடிக்கிறார். கலைப்புலி தாணு இப்படத்தை தயாரிக்கிறார். இதில் நாயகிகளாக சமந்தா, எமிஜாக்சன் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கான பூஜை சமீபத்தில் நடந்தது. விஜய் இந்த படத்தில் மூன்று கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது. எனவே ‘மூன்று முகம்’ என பெயர் வைத்தால் பொருத்தமாக இருக்கும் என படக்குழுவினர் கருதுகின்றனர். ‘மூன்று முகம்’ என்பது ரஜினி ஏற்கனவே நடித்த படத்தின் தலைப்பு. எனவே அந்த பெயரை வைக்க ரஜினியிடம் சம்மதம் வாங்க முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது.

Post a Comment

Powered by Blogger.