Halloween party ideas 2015
.

அமெரிக்காவில் தந்தை இறந்துகிடப்பதை பார்த்து கதறி அழுத குழந்தையை பொலிசார் ஒருவர் சமாதானப்படுத்தியுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் சாலை விபத்தால் ஒரு வாகனம் சாலையை விட்டு அருகிலுள்ள புல்வெளிக்குள் சீறிப் பாய்ந்தது.

விபத்துக்குள்ளான காருக்கு பின்பாக காரில் வந்து கொண்டிருந்த பொலிஸ் ஒருவர், இந்த காட்சியைப் பார்த்து பதறி, தனது காரை சாலையோரமாக நிறுத்தி விட்டு கார் கவிழ்ந்து கிடந்த புல்வெளியை நோக்கி வேகமாக ஓடினார்.

அங்கு விபத்துக்குள்ளான காருக்குள் வீறிட்டு அழுது கொண்டிருந்த குழந்தையை தூக்கிக் கொண்ட பொலிஸ், ரத்த வெள்ளத்தில் கிடந்த அப்பாவைப் பார்த்து அழுது கொண்டிருந்த குழந்தையை சமாதானப்படுத்துவதற்காக 'ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்’ என்ற பாடலை பாடியுள்ளார்.
>மனதை நெகிழச் செய்யும் இந்தக் காட்சியை தனது செல்போனில் படமெடுத்த அந்த ஓட்டுனர் இதை தனது பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார்.

இதுகுறித்து நிக் ஸ்ட்ரக் கூறுகையில், அந்தக் குழந்தையை தூக்கிய நொடியில் அது என்னுடைய குழந்தை என்றுதான் நினைத்தேன். எனக்கும் 2 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது என்று கூறியுள்ளார்.


தற்போது இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவ அந்தக் காவலரை அனைவரும் நாயகனாகக் கொண்டாடி வருகின்றனர்.

தற்போது, அந்த விபத்தில் காயமடைந்த மனைவி மற்றும் இந்த குழந்தையை தவிர்த்து மற்ற 3 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

Powered by Blogger.