Halloween party ideas 2015
.

தமிழ் சினிமாவின் 90களில் முன்னணி நடிகையாக விளங்கிய மீனா பிரபல தொழில் அதிபரைத் திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டார். தற்போது நடிகை மீனாவுக்கு நைனிகா என்ற அழகான பெண் குழந்தை உள்ளது.

அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க இருக்கும் புதிய படத்தில் நடிப்பதற்கு ஒரு குழந்தை தேவைப்பட மீனாவை கேட்டதற்கு அவர் சரி என்று கூறிவிட்டாராம். இப்படத்தில் விஜய்யின் மகளாக அறிமுகமாகிறார் நைனிகா. மீனா இதுவரை விஜய்யுடன் இணைந்து நடிக்கவில்லை என்றாலும், ஷாஜகான் படத்தில் அவருடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார்.

Post a Comment

Powered by Blogger.