Halloween party ideas 2015
.

வாட்ஸ் அப்பில் ஒரு வீடியோ பரவி வருகிறது. அந்த வீடியோவில் பத்திரிகையாளர்கள் முன்பு பேசும் இளம்பெண், என்னுடைய பெயர் யமுனா. நான் திருப்போரூரில் இருக்கிறேன். திருப்போரூர் எம்எல்ஏ மனோகரன் மூலியமாக கடந்த 4 வருடமாக ஊரக வளர்ச்சித்துறையில் கனிணி உதவியாளராக வேலை செய்து வருகிறேன். அவர் வேலை வாங்கி தந்ததால் அவருடைய சட்டமன்ற அலுவலகத்தில் அவருடைய சொந்த வேலைக்காக அடிக்கடி வேலை செய்ய சொல்லுவார்.

அப்படி வேலை செய்யும்போது எனது அருகில் அமர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்தார். இது எனக்கு பிடிக்கவில்லை. அதனால் அவருடைய ஆபீசுக்கு போவதை நிறுத்திவிட்டு என்னுடைய வீட்டில் இருந்து வந்தேன். கடந்த 4 நாட்களாக போன் செய்தும், போன் எடுக்காததால் அவருடைய அடியாட்கள் 4 பேர் என்னுடைய வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவர்களுடைய செல்போனில் அவர் (மனோகரன்) மீண்டும் அலுவலகத்திற்கு வரும்படி மிரட்டினார். மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு கஷ்டப்படுகிறேன். நிறைய பெண்கள் அவரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி உள்ளனர். அவர்களால் சொல்ல முடியாததை நான் இன்று உங்கள் முன்பு சொல்கிறேன். இவ்வாறு அந்த வீடியோவில் அந்தப் பெண் கூறியுள்ளார். வாட்ஸ் அப்பில் பரவும் இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

Powered by Blogger.