Halloween party ideas 2015
.

உலக தமிழர் பேரவை, இலங்கை அரசாங்கத்துடன் நான்கு கட்டங்களின் அடிப்படையிலேயே செயற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு இதனை தெரிவித்துள்ளார்.


1-இலங்கை தமிழர் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் இணக்கத்துடன் பொது உடன்பாடு.

2- குடியியல் குழுக்களுடன் இணைந்து செயற்படுவது இதில், தென்பகுதியில் உள்ள அரசியல் மற்றும் அரசியல் அற்ற குழுக்களுடன் இணைந்து செயற்பட்டு தமிழர்களின் பிரச்சினைக்கான அடிப்படையை விளக்குவது.

3- சர்வதேச சமூகத்தின் மத்தியில் தெளிவாக்கலை உண்டாக்குவது. இதன்மூலம் போரகை்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணையை உறுதிப்படுத்தி உண்மையை வெளிக்கொணர்வது.

4- போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச உதவியை பெற்றுக்கொடுப்பது என்று சுரேந்திரன் பட்டியலிட்டுள்ளார்.

தமது அமைப்பு, 2011ம் ஆண்டு முதல் இந்த நான்கு கட்ட செயற்பாட்டின் மூலமே இயங்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

போரின் போது தமது அமைப்பு, விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்தது என்ற குற்றச்சாட்டை மறுத்த அவர், போரின் பின்னர் 2010ம் ஆண்டே உலக தமிழர் பேரவை, பிரித்தானிய நாடாளுமன்றத்தில் அந்த நாட்டின் வெளியுறவு செயலரினால் ஆரம்பிக்கப்பட்டது என்று சுட்டிக்காட்டியுள்ளார். (யார் இவர்கள்?)

இதேவேளை தமது அமைப்பு இலங்கையில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருப்பதாகவும் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Powered by Blogger.