Halloween party ideas 2015
.

சமூக வலைத்தளமான பேஸ்புக் மூலம் பழகிய நபர் ஒருவரால் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட 14 வயது சிறுமி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


போலந்து நாட்டில் உள்ள Gdansk நகரத்தில் 14 வயதான Anaid Tutghushyan என்ற சிறுமி தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார்.

இவர், பேஸ்புக் மூலம் நபர் ஒருவரை சந்தித்து ஒன்லைன் வழியாகவே அவருடன் பழகி வந்துள்ளார். நபரின் வயதை தெரிந்துகொள்வதற்காக முதலில் தனது வயதை 25 என்று கூறியிருக்கிறார்.

சிறிது நாட்களுக்கு பிறகு தனது வயதை 17 என்று கூறிய நிலையில், நேரில் சந்திக்கலாமா என்று அந்த நபர் வற்புறுத்தவே, சிறுமியும் அந்த நபரை சந்திக்க சென்றுள்ளார்.

நபரை நேரில் சந்தித்த சிறுமி அவருக்கு 40 வயதாகிறது என்பதை அறிந்து பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். பின்னர், அங்கிருந்து தப்பிக்க நினைத்த சிறுமியை அந்த நபர் கொடூரமாக கற்பழித்துள்ளார்.

சில மணி நேரங்களுக்கு பின்னர் அழுதுகொண்டே வீடு திரும்பிய தனது மகளிடம் தாயார் காரணம் கேட்டுள்ளார். ஆனால், அந்த சிறுமி எதுவும் கூறவில்லை.

இரவு முழுவதும் அழுதுகொண்டே இருந்த சிறுமி, காலையில் எழுந்து தான் வெளியே போக விரும்புவதாகவும், வீட்டிற்கு திரும்பி வந்து காரணத்தை கூறுவதாக சொல்லிவிட்டு கிளம்பியுள்ளார்.

Gdansk Orunia ரயில் நிலையத்திற்கு வந்த அந்த சிறுமி சுமார் 20 நிமிடங்கள் பிளாட்பாரத்தில் அமர்ந்து தேம்பி தேம்பி அழுதுள்ளார்.

பின்னர், திடீரென எழுந்த அவர் வியன்னா நோக்கி சென்றுகொண்டிருந்த ரயில் முன் பாய்ந்துள்ளார். கணப்பொழுதில் உடல் துண்டு துண்டாக சிதறிய காட்சியை கண்ட பயணிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

மகளின் தற்கொலையை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாயாருக்கு, சிறுமியின் தோழி ஒருவர் அழைப்பு செய்து ‘உங்கள் மகளை பேஸ்புக் நண்பர் ஒருவர் கற்பழித்து விட்டார்’ என தகவல் அளித்துள்ளார்.

இதனால் பெரும் மன உளைச்சலுக்குள்ளான அவர் மகளின் பேஸ்புக் கணக்கை திறந்து அவர் யாருடன் பேசியுள்ளார் என தேடியுள்ளார்.

தனது மகளிடம் Krystian W என்ற பெயரில் பழகிய அந்த நபரை கண்டுபிடித்து அவருடன் தொடர்பில் உள்ள சுமார் 14 சிறுமிகளை ரகசியமாக விசாரித்துள்ளார்.

இவர்களில் 3 சிறுமிகளையும் அந்த நபர் கற்பழித்திருந்தது தாயாருக்கு தெரியவந்துள்ளது. பேஸ்புக் மூலமாக சிறுமிகளை சந்திக்கும் அந்த நபர், அவர்களுக்கு சொகுசு கிளப், ஆடம்பர பங்களா, உல்லாச கப்பல்களில் அழைத்து செல்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அவர்களை கற்பழித்தது தெரியவந்துள்ளது.

இந்த தகவல்கள் அனைத்தையும் பொலிசாரிடம் தாயார் தெரிவித்ததில், அந்த நபரை தேடி கண்டுபிடித்து கைது செய்த பொலிசார் அவரிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

Post a Comment

Powered by Blogger.