Halloween party ideas 2015
.

12-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் பேஸ்புக்கில் ஏற்பட்ட பழக்கத்தின் விளைவாக 3 வாலிபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் கிழக்கு பகுதியில் கடந்த 21-ம் தேதி பள்ளி மாணவி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பாக பேஸ்புக்கில் சமீர் என்பவனுடன் பழகிய அந்த மாணவி, சம்பவம் நடந்த அன்று, மார்க்கெட் வருவதை தெரிந்து கொண்டு அவரை தொலைபேசியில் அழைத்த சமீர், உடனடியாக உன்னை சந்திக்க வேண்டும் என்று அந்த மாணவியிடம் கூற, தன் 2 நண்பர்களுடன் காரில் இருந்த சமீரை அந்த மாணவி சந்தித்தார். சமீர் கொடுத்த தண்ணீரைக் குடித்து விட்டு மாணவி மயங்கி விழுந்துவிடவே, அவரைக் கடத்திச் சென்ற 3 கொடூரர்களும் 2 நாட்களாக அந்த மாணவியை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

வழக்கை விசாரித்த டெல்லி போலீசார் 2 பேரைக் கைது செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள மற்றொரு வாலிபரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Post a Comment

Powered by Blogger.