Halloween party ideas 2015
.

லுக்கோமியா என்னும் ரத்த புற்று நோயால் நோயால் பாதிக்கப்பட்டு இங்கிலாந்தில் உள்ள பிர்கிக்காம் குயின் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் ஒமர் அல் ஷேக்( வயது 16) மருத்துவமனை படுக்கைதான் அவரது வாழ்விடம்.இவரின் வாழ் நாள் எண்ணபடுவதாகவும் அவர் சில நாட்களில் இறந்து விடுவார் எனவும் டாக்டர்கள் எச்சரித்து இருந்தனர்.

தனது வாழ் நாளை எண்ணிக் கொண்டிருந்த அந்த இளைஞர் தான் சிறு வயது முதலே காதலித்து வந்த இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் ஆசையை வெளியிட்டு உள்ளார்.

ஒமர் அல் ஷேக் என்ற இளைஞர் தனது கடைசி ஆசையை தனது காதலி அமி கிராஸ்வெல்லிடம் தெரிவித்து உள்ளார். தனது காதலரின் விருப்பத்தை நிறைவேற்ற காதலி அமியும் முடிவு செய்தார். தனது காதலனுக்கு ஒரு சில நாட்களே மனைவியாக வாழ முடியும் என்று தெரிந்தும் திருமணத்துக்கு ஒப்புக் கொண்டார்.

பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ மருத்துவமனையில் வைத்து அவர்களது திருமணம் நடந்தது. ஒமர் காதலியின் விரலில் மோதிரம் அணிவித்து பூங்கொத்து கொடுத்தார்.

இருவரது குடும்பத்தார் முன்னிலையிலும், திருமணம் நடைபெற்றது. குடும்பத்தார் அனைவருமே சோகமே உருவாக திருமணத்தில் பங்கேற்றாலும், மணமகன் ஒமர் தனது அதிகபட்ச மகிழ்ச்சியை புன்னகை மூலம் வெளிப்படுத்தினார்.

மணமக்கள் சிறிது நேரம் பேசியபடி இருந்த நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை தனது மனைவியின் கையைப் பிடித்தபடியே, ஒமர் தனது கடைசி மூச்சை விட்டார்.

இது குறித்து அமி கூறும் போது நான் அவரை பார்த்து பெருமையாக உணர்ந்தேன் நான் ஓமரை இழந்து உள்ளேன். இந்த உலகின் சிறந்த மருமகளாக எனது நான் இருப்பேன். அவர் எனது விரலில் மோதிரத்தை அணிவித்து நான் உன்னுடன் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும். என கூறினார். அவரை நான் விரும்புகிறேன். இது மகிழ்சியான நினைவாக இருக்க வாய்ப்பு கிடைத்ததற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

Post a Comment

Powered by Blogger.