Halloween party ideas 2015
.

உத்தரபிரதேச மாநிலத்தில் 22 வயது பெண் ஒருவர் 7 பேரால் கூட்டு பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த 22 வயது பெண் குர்கானில் வசித்து வருகிறார்.

அதே நகரை சேர்ந்த கபில் என்பவருடன் பழகி வந்த அவர், சம்பவத்தன்று கபிலை, உள்ளூர் சந்தையில் சந்தித்துள்ளார்.

இதையடுத்து அந்த பெண்ணை கெஸ்ட் ஹவுஸ் ஒன்றுக்கு அழைத்து சென்ற கபில், அங்கு அவர் மற்றும் 6 பேர் சேர்ந்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர் இதுகுறித்து பொலிசில் அந்த பெண் நேற்று புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், நான் மார்க்கெட்டில் கபிலை பார்த்த பிறகு, இருவரும் கெஸ்ட் ஹவுஸ் சென்றோம்.

அங்கு மறைந்திருந்த கபிலின் 6 நண்பர்கள், கபிலோடு சேர்ந்து என்னை கூட்டு பலாத்காரம் செய்துவிட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த புகாரையடுத்து பாதிக்கப்பட்ட கூறப்படும் பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Powered by Blogger.