Halloween party ideas 2015
.

உடவலவ கொலம்பகே நேற்று சடலமாக மீட்க்கப்பட்ட 17 வயது மாணவனின் கொலை தொடர்பில் ஆரம்ப கட்ட அதிர்ச்சி தகவல்கள் சிலவற்றை பொலிசார் பெற்றுள்ளனர். அத்துடன், கொலைச்சந்தேகநபர்கள் என இருவரையும் கைது செய்துள்ளனர். காதல் தொடர்பு காரணமாகவே இந்த கொலை நடந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

17 வயது மாணவனின் சடலம் உடவளவை பிரதேசத்திலுள்ள தேக்கு மர காட்டில் இருந்து நேற்று (15) அதிகாலை கண்டெடுக்கப்பட்டிருந்தது.

பிரத்தியேக வகுப்பொன்றிற்காக நேற்று முன்தினம் (14) மாலை வீட்டிலிருந்து வெளியில் சென்ற இந்த மாணவன், இரவாகியும் வீடு திரும்பாததையடுத்து, அவரது தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மறுநாள் காலையில் உறவினர்களும், பொலிசாரும் நடத்திய தேடுதலில், தேக்கங்காட்டிற்குள்ளிருந்து மாணவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. சடலத்தில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டன.

இதனையடுத்து மோப்பநாய்களின் உதவியுடன் பொலிசார் நடத்திய விசாரணையில் இருவர் கைதாகினர். 17 மற்றும் 21 வயதான இருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில், கொலை தொடர்பான முக்கிய பல துப்புக்கள் கிடைத்ததாக பொலிசார் கூறுகின்றனர்.

கொல்லப்பட்ட மாணவனிற்கும், பிறிதொருவருக்குமிடையிலிருந்த காதல் சர்ச்சையே இந்த விபரீதத்தில் முடிந்துள்ளது.

சந்தேகநபர்கள் பயன்படுத்திய முச்சக்கரவண்டியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
 

Post a Comment

Powered by Blogger.